பொது செய்தி

தமிழ்நாடு

போத்தனுார் - பொள்ளாச்சி மின்பாதையில் சரக்கு ரயில்

Added : அக் 03, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : போத்தனுார் -- பொள்ளாச்சி வழித்தடத்தில் முதல் முறையாக, மின்சார சரக்கு ரயில் இயக்கப்பட்டது.பொள்ளாச்சி - போத்தனுார் ரயில் வழித்தடம் மின்மயமாக்கப்பட்டு, கடந்த மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார். ஆய்வு அறிக்கையில், வழித்தடம் ரயில்கள் இயக்க தகுதி உள்ளதாக அறிவித்தார்.இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு, முதல் முறையாக மின்சார சரக்கு ரயில் வாயிலாக,
 போத்தனுார் - பொள்ளாச்சி   மின்பாதையில் சரக்கு ரயில்

பொள்ளாச்சி : போத்தனுார் -- பொள்ளாச்சி வழித்தடத்தில் முதல் முறையாக, மின்சார சரக்கு ரயில் இயக்கப்பட்டது.

பொள்ளாச்சி - போத்தனுார் ரயில் வழித்தடம் மின்மயமாக்கப்பட்டு, கடந்த மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார். ஆய்வு அறிக்கையில், வழித்தடம் ரயில்கள் இயக்க தகுதி உள்ளதாக அறிவித்தார்.இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு, முதல் முறையாக மின்சார சரக்கு ரயில் வாயிலாக, மக்காச்சோளம் கொண்டு வரப்பட்டது.

ஆந்திர மாநிலம், தெனாலி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, பொள்ளாச்சி தனியார் கோழி தீவன தயாரிப்பு நிறுவனத்துக்கு, 20 வேகன்களில், 1,300 டன் மக்காச்சோளம் ஏற்றி வந்தது. சரக்கு ரயிலில் இருந்து, 100 பாரம் இறக்கும் தொழிலாளர்களைக்கொண்டு, 70 லாரிகளில் மக்காச்சோளம் நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையில், சரக்கு ரயில் வெற்றிகரமாக இயக்கப்பட்டதால், விரைவில் பயணியர் ரயில்களும் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X