பொது செய்தி

தமிழ்நாடு

மாஜி அமைச்சர் - பெண் பேசிய ஆடியோ 'லீக்' சமூக வலைதளங்களில் வைரல்

Added : அக் 03, 2021
Share
Advertisement
உடுமலை : அ.தி.மு.க., வைச்சேர்ந்த, மாஜி அமைச்சரும், ஒரு பெண்ணும், அரசு நிர்வாகம், பணம் கொடுக்கல், வாங்கல் குறித்து பேசும், ரகசிய ஆடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அ.தி.மு.க.,வைச்சேர்ந்த, மாஜி கால்நடைத்துறை அமைச்சரும், தற்போது உடுமலை எம்.எல்.ஏ., வாகவும் உள்ள ராதாகிருஷ்ணன் ஒரு பெண்ணிடம் பேசுவது போன்ற, 'ஆடியோ' சமூக வலைதளங்களில் வைரலாகி

உடுமலை : அ.தி.மு.க., வைச்சேர்ந்த, மாஜி அமைச்சரும், ஒரு பெண்ணும், அரசு நிர்வாகம், பணம் கொடுக்கல், வாங்கல் குறித்து பேசும், ரகசிய ஆடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க.,வைச்சேர்ந்த, மாஜி கால்நடைத்துறை அமைச்சரும், தற்போது உடுமலை எம்.எல்.ஏ., வாகவும் உள்ள ராதாகிருஷ்ணன் ஒரு பெண்ணிடம் பேசுவது போன்ற, 'ஆடியோ' சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஒன்றரை நிமிடம் முதல், 31 நிமிடம் வரை பேசிய ஏழுக்கும் மேற்பட்ட ஆடியோ, வெளியாகியுள்ளது. .
கொஞ்சும் தொனியில் பேசும் அப்பெண், அமைச்சரிடம் தொடர்பில் இருந்தது, அவரது குடும்பத்துக்கு தெரிந்து பெரும் பிரச்னையானதாக கூறுகிறார்.மேலும், பெட்ரோல் பங்க் வைத்துள்ளதும், 1.10 கோடி ரூபாய் கடன், அதற்கு தீர்வு காண்பதற்கான வழிகள், வங்கியில் உத்தரவாதம் அளிப்பது மற்றும் அமைச்சர் தொகை கொடுத்து உதவியது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசியுள்ளனர். ஒரு சில இடங்களில், அவர் 'குட்டிமா' என செல்லமாக அழைத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அப்பெண், பணம் கொடுத்து பிரச்னையை முடிக்கவில்லை என்றால், குழந்தைகளுடன் உங்கள் வீட்டுக்கே வந்து விடுவதாக கூறுகிறார்.ஒரு ஆடியோவில், அப்போதைய திருப்பூர் எஸ்.பி., திஷாமிட்டலை அழைத்து, பெட்ரோல் பங்க்கில், பிரச்னை செய்த குமரலிங்கம் பெண் எஸ்.ஐ.,யை உடனடியாக மாற்றி, ஒரு ஆண் எஸ்.ஐ.,யை நியமிக்குமாறு கூறுகிறார். எஸ்.பி.,யும், 'நீங்களே யாராவது இருந்தால் கூறுங்கள்' என தெரிவிக்கும் ஆடியோ ஒன்றும் உள்ளது.

இந்த ஆடியோ மூலம், ஒரு பெண்ணுக்காக எஸ்.பி.,யை அழைத்து மாற்றக்கூறியது, பணி நியமனத்தில் தலையீடு, சூதாட்ட கிளப் நடத்தியது, சில்லிங் மது விற்பனை என பல விஷயங்கள் வெளியில் வந்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.இதுகுறித்து ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ''ஆடியோ வெளியாகியுள்ளது பற்றி எனக்கு தெரியவில்லை; வேண்டாதவர்கள் யாராவது இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X