பொது செய்தி

இந்தியா

காஞ்சி மாமுனிவர் ஆராய்ச்சி மையத்தில் அறக்கட்டளை துவக்கம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
புதுச்சேரி : காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பேரா சிரியர் பூபதி அறக்கட்டளை துவக்க விழா நடந்தது.தாகூர் கலைக்கல்லுாரியில் தமிழ்த்துறை தலைவராக 24 ஆண்டுகள் பணிபுரிந்த பேராசிரியர் பூபதியின் நினைவாக, கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை ஏற்படுத்தி உள்ளனர்.இதன் துவக்க விழா, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய
 காஞ்சி மாமுனிவர் ஆராய்ச்சி  மையத்தில் அறக்கட்டளை துவக்கம்

புதுச்சேரி : காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பேரா சிரியர் பூபதி அறக்கட்டளை துவக்க விழா நடந்தது.

தாகூர் கலைக்கல்லுாரியில் தமிழ்த்துறை தலைவராக 24 ஆண்டுகள் பணிபுரிந்த பேராசிரியர் பூபதியின் நினைவாக, கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை ஏற்படுத்தி உள்ளனர்.இதன் துவக்க விழா, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய கருத்தரங்கு கூடத்தில் நடந்தது.மையத்தின் இயக்குநர் செல்வராசு தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் நிர்மலா முன்னிலை வகித்தார்.

பேராசிரியர் முருகையன் வரவேற்றார். அறக்கட்டளை தலைவர் நெய்தல் நாடன் நோக்கவுரை ஆற்றினார்.புதுச்சேரி பல்கலைக்கழக தமிழ்துறை முன்னாள் பேராசிரியர் ஆரோக்கியநாதன் வாழ்த்திப் பேசினார். பேராசிரியர்கள் பத்மநாபன், சிலம்புசெல்வராசு மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X