பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிக்க 11 ஆவணம்

Updated : அக் 03, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை-'ஊரக உள்ளாட்சி தேர்தலில், வாக்காளர் அடையாள அட்டை அல்லது 11 அடையாள ஆவணங்களில், ஏதேனும் ஒன்றை காண்பித்து ஓட்டளிக்கலாம்' என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.ஆணையம் அறிவிப்பு:காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இரண்டு

சென்னை-'ஊரக உள்ளாட்சி தேர்தலில், வாக்காளர் அடையாள அட்டை அல்லது 11 அடையாள ஆவணங்களில், ஏதேனும் ஒன்றை காண்பித்து ஓட்டளிக்கலாம்' என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.



latest tamil news


ஆணையம் அறிவிப்பு:காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.'பூத் சிலிப்' எனப்படும், ஓட்டுச்சாவடி சீட்டு வைத்திருப்போரும்,இல்லாதவர்களும், வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து ஓட்டளிக்கலாம்.


latest tamil news


அடையாள அட்டை இல்லாதவர்கள், ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை திட்ட அட்டை, வங்கி அல்லது தபால் அலுவலக கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சகத்தின், மருத்துவக் காப்பீடு 'ஸ்மார்ட்' கார்டு, ஓட்டுனர் உரிமம், 'பான்' கார்டு, பாஸ்போர்ட். ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத் துறை நிறுவன அடையாள அட்டை, எம்.பி., - எம்.எல்.ஏ., அடையாள அட்டை ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றை காண்பித்து ஓட்டளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
03-அக்-202109:36:34 IST Report Abuse
duruvasar தமிழ்நாட்டில் தற்சமயம் நிகழும் எந்த செய்தியாக இருந்தாலும் நடப்பது திமுக ஆட்சி என நினைவில் கொள்ளவேண்டும் என்ற கனி அக்காவின் அறிவுரை மனதில் வந்துவிடுகிறது. நன்றி அக்கா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X