பொது செய்தி

இந்தியா

நித்ய கல்யாண பெருமாளுக்கு முத்தங்கி அலங்காரம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
காரைக்கால் : நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், புரட் டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதத்தையொட்டி ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடைபெற்று வருகிறது.நேற்று புரட்டாசி மூன்றாம்
 நித்ய கல்யாண பெருமாளுக்கு முத்தங்கி அலங்காரம்

காரைக்கால் : நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், புரட் டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதத்தையொட்டி ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடைபெற்று வருகிறது.நேற்று புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி மூலவர் ரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது.

உற்சவர் நித்ய கல்யாணப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீ ரங்கநாயகி தாயார். ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் உடன் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் நித்ய கல்யாண பக்த ஜனசபாவினர் செய்தனர்.அதேபோல, காரைக்காலில் பல்வேறு பெருமாள் கோவில்களில் நேற்று சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X