பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
மதுரை-மதுரையில் காந்தி ஜெயந்தி விழா பல்வேறு அமைப்பினர் சார்பில் கொண்டாடப்பட்டது.விவசாய கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் 'க்ளீன் இந்தியா' பிரசாரத்தையொட்டி காந்தி ஜெயந்தி விழா நடந்தது. என்.எஸ்.எஸ். பிரதிநிதிகிறிஸ்மா வரவேற்றார்.டீன் பால்பாண்டி தலைமை வகித்தார். காந்தி குறித்து மாணவி மகாலட்சுமி பேசினார். ரித்திகாபாடினார். என்.எஸ்.எஸ்., பிரதிநிதி வாசு நன்றி கூறினார்.பா.ஜ.,
 மதுரையில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்

மதுரை-மதுரையில் காந்தி ஜெயந்தி விழா பல்வேறு அமைப்பினர் சார்பில் கொண்டாடப்பட்டது.விவசாய கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் 'க்ளீன் இந்தியா' பிரசாரத்தையொட்டி காந்தி ஜெயந்தி விழா நடந்தது. என்.எஸ்.எஸ். பிரதிநிதிகிறிஸ்மா வரவேற்றார்.டீன் பால்பாண்டி தலைமை வகித்தார். காந்தி குறித்து மாணவி மகாலட்சுமி பேசினார். ரித்திகாபாடினார். என்.எஸ்.எஸ்., பிரதிநிதி வாசு நன்றி கூறினார்.பா.ஜ., புதுார் மண்டல்சார்பில் சுவட்ச் பாரத் இயக்கம் மாநில செயற்குழு உறுப்பினர் சசிராமன்தலைமையில் நடந்தது. மண்டல் தலைவர் பாஸ்கரன், பொறுப்பாளர் ஜனார்த்தனன், நிர்வாகிகள்மாணிக்கம், வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன. கோட்ட ரயில்வே அலுவலகத்தில் மேலாளர் பத்மநாபன் அனந்த் படத்திற்கு மலர் துாவினார். கூடுதல் மேலாளர் ரமேஷ்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். வினாடி வினா நிகழ்வு இணையதளம் மூலம் நடந்தது. 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆட்சிமொழி அதிகாரி சீனிவாசன் செய்திருந்தார்.மதுரை காந்தி மியூசியத்தில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, தேசிய கொடி ஏற்றி, மரியாதை செய்யப்பட்டது. 'சத்தி ஒளி மகாத்மா' என்ற புத்தகத்தை மியூசியதலைவர் மாணிக்கம்வெளியிட, முதல் பிரதியை தமிழ்நாடு சர்வோதயா மண்டல் தலைவர் சுந்தரராஜன் பெற்றார். அமைதி சங்க தலைவர் சரவணன், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி குகன், மேலுார் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் பங்கஜம்,மியூசிய செயலாளர் நந்தாராவ், செசி இயக்குனர் வினோத்குமார், கல்வி அலுவலர் நடராஜன் பங்கேற்றனர்.காந்தி மியூசியத்தில்உள்ள சிலைக்கு பா.ஜ., மாவட்ட தலைவர் சுசீந்திரன் தலைமையில்மாவட்ட தலைவர் சந்தோஷ் சுப்பிரமணியன்,மண்டல் தலைவர் பாலுச்சாமி, சிறுபான்மையினர் அணி மாநில செயலாளர் கல்வாரி தியாகராஜன் உள்ளிட்டோர் மாலையணிவித்தனர்.மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்படத்திற்கு மதுரை கல்லுாரி வாரிய பள்ளிகளின் தாளாளர் பார்த்தசாரதி மாலையணிவித்தார். வாரிய மூத்த உறுப்பினர் இல.அமுதன், ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் முரளிதரன் ஏற்பாடுகளை செய்தார்.வாடிப்பட்டிபரவையில் பா.ஜ., வினர் மண்டல் தலைவர் ராமேஷ்கண்ணன் தலைமையில் காந்தி சிலைக்கு மரியாதை செய்தனர். பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. பொதுச்செயலாளர்கள் வீரக்குமார், ஜெகநாதன், துரைபாஸ்கர் மற்றும் கிளை அணி பிரிவு நிர்வாகிகள் பங்கேற்றனர்.பரவை பேரூர் காங். தலைவர் கோபால் தலைமையில் காந்தி ஜெயந்தி மற்றும் பாரதியார்நுாற்றாண்டு விழா நடந்தது. துணைத் தலைவர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். காந்தி மக்கள் இயக்கம் சார்பில் தியாகி வாரிசுகள் சஞ்சய்காந்தி வளர்மதி, சிவஞானம், நேதாஜி பங்கேற்றனர்.தேனுாரில் சுழியம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் காமராஜர் நினைவு நாள், காந்தி ஜெயந்தி விழா நடந்தது. காந்தி அரை ஆடை அணிய காரணமாக இருந்த தேனுார் ரயில்வே கேட் பகுதியில் நினைவுத் துாண் மற்றும் கல்வெட்டு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஊராட்சி தலைவர் பாலு தலைமையில் நடந்த கிராமசபை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.திருப்பரங்குன்றம்மதுரை ஆர்.எஸ்.எஸ்., சார்பில் தென்பரங்குன்றம்குடவரை கோயிலில் 150க்கும் மேற்பட்டோர் துாய்மைப் பணியில் ஈடுபட்டனர். திருப்பராய்த்துறை, திருவேடகம் தபோவன பள்ளி நிர்வாகி பூஜ்ய சுவாமி பரமானந்த மகராஜ், டாக்டர் மாதவன்துவக்கி வைத்தனர். ஆர்.எஸ்.எஸ்., மதுரை தலைவர் மங்களமுருகன் வரவேற்றார். கேசவ சேவா கேந்திர டிரஸ்ட் தலைவர் சந்திரன், சேவா பாரதி மாவட்ட தலைவர் ஜெயபாலன், ஆர்.எஸ்.எஸ்., மாநில பொறுப்பாளர்கள் பிரசோபகுமார், சீனிவாசன், ஹிந்து முன்னணி, பா.ஜ,, நிர்வாகிகள் பங்கேற்றனர்.துணை செயலாளர் கணேசன் ஏற்பாடுகள் செய்தார். திருப்பரங்குன்றம்ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலுள்ள காந்தி சிலைக்கு காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. செய்தி தொடர்பாளர் அய்யல்ராஜ் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மாலை அணிவித்தார். நிர்வாகிகள் ஈஸ்வரன், சேது, தெய்வம், உதயகுமார், அரவிந்தன், சதீஷ் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X