பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் நிறுவனர் பிறந்த நாள் விழா

Added : அக் 03, 2021
Share
Advertisement
மதுரை-தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி மதுரை வடக்கு வெளிவீதியில் உள்ள பிராமணர் சங்கத்தில் நடந்தது.நகர் கிளை பொதுச்செயலாளர் பாபு வரவேற்றார். தலைவர் கணபதி வரதசுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் அமுதன், மாவட்ட தலைவர் பக்தவத்சலம் முன்னிலை

மதுரை-தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி மதுரை வடக்கு வெளிவீதியில் உள்ள பிராமணர் சங்கத்தில் நடந்தது.நகர் கிளை பொதுச்செயலாளர் பாபு வரவேற்றார். தலைவர் கணபதி வரதசுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் அமுதன், மாவட்ட தலைவர் பக்தவத்சலம் முன்னிலை வகித்தனர்.மதுரைக் கல்லுாரி வாரிய பள்ளிகளின் தாளாளர் பார்த்தசாரதி புத்தாடை வழங்கினார். மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் மீனாட்சிசுந்தரம், எஸ்.எஸ்.காலனி கிளை நிர்வாகி வெங்கடாச்சலம், உறுப்பினர் கோவிந்தராஜன் கலந்து கொண்டனர். நகர் கிளை பொருளாளர் சங்கரநாராயணன் நன்றி கூறினார்.* மதுரை செல்லுார் குலமங்கலம் ரோடு கண்மாய் கரையில் நீர்வள ஆதாரங்கள் பாதுகாப்பு மற்றும்மக்கள் பொது நல அறக்கட்டளை சார்பில் டி.வி.ஆர்., படத்திற்கு தலைவர் சங்கரபாண்டியன் மாலையணிவித்தார். நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க தலைவர் அபுபக்கர், சமூக ஆர்வலர் அபுபக்கர் சித்திக், நிர்வாகிகள் பாலகுரு, ஆனந்தகுமார், கார்த்திக்ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X