சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ்காரர் வீடு உட்பட 2 வீடுகளில் நகை திருட்டு

Added : அக் 03, 2021
Share
Advertisement
தியாகதுருகம் : தியாகதுருகத்தில் ஒரே நாள் இரவில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தியாகதுருகம் பாரதி நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 30; ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணி புரிந்து வருகிறார். இவர், நேற்று வேலைக்கு சென்றதும் அவரது மனைவி ராஜபிரியா இரவு 8:00 மணிக்கு கதவை பூட்டி விட்டு அருகில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு

தியாகதுருகம் : தியாகதுருகத்தில் ஒரே நாள் இரவில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தியாகதுருகம் பாரதி நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 30; ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணி புரிந்து வருகிறார். இவர், நேற்று வேலைக்கு சென்றதும் அவரது மனைவி ராஜபிரியா இரவு 8:00 மணிக்கு கதவை பூட்டி விட்டு அருகில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு துாங்கச் சென்றுவிட்டார்.காலையில் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த மூன்றரை சவரன் நகை, வெள்ளிக் கொலுசுகள், 10 ஆயிரம் ரூபாய் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதேபோன்று, புக்குளம் ரோட்டில் உள்ள குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் தங்கமணி மனைவி கலையரசி, 43; இவர், நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் தனது வீட்டை பூட்டிவிட்டு கோட்டை மேட்டில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்றிருந்தார்.காலை வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஒன்னே முக்கால் சவரன் நகை திருடு போயிருப்பது தெரியவந்தது.புகார்களின் பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X