பொது செய்தி

தமிழ்நாடு

துணிச்சல், உண்மையை கற்றுக்கொடுத்தவர் டி.வி.ஆர்.: நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேச்சு

Added : அக் 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை-''எனக்கு துணிச்சல், உண்மை, உத்வேகத்தை கற்றுக் கொடுத்தவர் 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையர். அவர் எனது முன்னேற்றத்திற்கான வழிகாட்டி,'' என நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசினார். 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பிறந்தநாளையொட்டி பாரதி யுவகேந்திரா சார்பில் பார்வையற்றோருக்கு இலவச அரிசி, சேவாரத்னா விருது வழங்கும் விழா மதுரையில் நடந்தது.விருதுநகர்
 துணிச்சல், உண்மையை கற்றுக்கொடுத்தவர் டி.வி.ஆர்.: நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேச்சு

மதுரை-''எனக்கு துணிச்சல், உண்மை, உத்வேகத்தை கற்றுக் கொடுத்தவர் 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையர். அவர் எனது முன்னேற்றத்திற்கான வழிகாட்டி,'' என நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசினார்.

'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பிறந்தநாளையொட்டி பாரதி யுவகேந்திரா சார்பில் பார்வையற்றோருக்கு இலவச அரிசி, சேவாரத்னா விருது வழங்கும் விழா மதுரையில் நடந்தது.விருதுநகர் அரசு மருத்துவமனை டீன் சங்குமணி தலைமை வகித்து பேசியதாவது:காந்தி பிறந்தநாளில் டி.வி.ராமசுப்பையர் பிறந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க போராடினார். நேர்மையானவர். கடின உழைப்பாளி. எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் சமூகத்திற்கு நல்லது செய்ய பாடுபட்டார் என்றார். நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசியதாவது: எனக்கு துணிச்சல், உண்மை, உந்துதல், உத்வேகத்தை கற்றுக் கொடுத்தவர் டி.வி.ராமசுப்பையர். எத்தனை அவதுாறுகள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் முன்னேற்ற வேண்டும் என எனக்கு வழிகாட்டியவர். ஒரு நாளிதழை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணம் டி.வி.ராமசுப்பையர்.சினிமா விளம்பரம் இல்லாமல் நடத்தப்படும் ஒரே நாளிதழ் 'தினமலர்'. குறைகளை துணிச்சலுடன் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறது என்றார்.விருதுநகர் சைபர் கிரம் ஏ.டி.எஸ்.பி., மணிவண்ணன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், ரோட்டரி முன்னாள் ஆளுநர் கண்ணன், மங்கையர்க்கரசி மில்ஸ் சேர்மன் கண்ணப்பச் செட்டியார், ஆடிட்டர் சேதுமாதவா, பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
03-அக்-202113:55:09 IST Report Abuse
Lion Drsekar இந்த மிகப்பெரிய மகானுக்கு சென்னையில் ஒரு விழாவும் எடுக்காதது வருத்தம் அளிக்கிறது . வாசகர்களாகிய நாம் எடுக்கவேண்டும். இன்றைக்கு தனி மனிதர்கள் தங்களின் அறிய கருத்துகளையும் மன சுமையையும் யாரிடமும் கூற முடியாத ஒரு நிலை, அப்படியே கூறினாலும் மனைவி, கணவன், குழந்தைகள் என்று யாருமே கண்டுகொள்வதே இல்லை, திருக்கோவில்களுக்கு சென்று இறைவன் முன் செல்ல முடியாமல் பூட்டு போடப்பட்டுவிட்டது, யாரிடமும் கூறாமல் இருந்தால் கண்டிப்பாக உடல் நலம் பாதிக்கும், நல்ல பல அறிய கருத்துக்களை கூறுவதற்கு ஒரே ஒரு சுமை தாங்கி தினமலர் மட்டுமே, நேரடியாகவும் நண்பர்கள் வாயிலாகவும் உண்மையாக கூறவேண்டும் ,இன்று தன பெயர் வரவேண்டும் என்பதற்காக , மற்றும் பெயர் வராவிட்டாலும் தன்னுடைய கருத்துக்களை வெளியிடவேண்டும் என்று முனைவோர்களுக்கு மற்ற நிலைகளில் கொடுப்பதைக் கொடுத்தால் மட்டுமே அங்கீகாரம் கிடைக்கிறது , ஆனால் தினமலர் மட்டுமே யாருடைய தயவும் இன்றி, நாம் வெளிப்படுத்தும் கருத்துக்களை இப்பூவுலகுக்கு பூத்துக்குலுங்க ஒரு இடம் தந்திருக்கிறது, குறிப்பாக தவறான கருத்துக்களை பதிவு செய்தாலும் அதனால் பதிவு செய்பவர்களுக்கு இன்னல்கள் வராமல் இருக்க அதற்க்கென ஒரு குழுவை நியமித்து யாரையும் பாதிக்காத அளவுக்கு தேவையற்றவைகளை எடுத்து நம்மைக் காப்பாற்றியும் வருகிறது தினமலர், மொத்தத்தில் டிவி பார்க்காதவர்களுக்கும், வேறு எந்த ஒரு செய்தித்தாள்களை பார்க்காதவர்களுக்கும், உயிர்காப்பான் தினமலர் மட்டுமே, அப்படிப்பட்ட இந்த பத்திரிக்கையை நமக்கு அளித்த நிறுவனருக்கும், அவரைப்போலவே நேர்மையாக பணியாற்றும் எல்லா ஊழியர்களுக்கும் நாம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம். நமக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கும் இந்த நிறுவனருக்கு நாமும் நம் பங்கிற்கு ஏதாவது ஒரு வழியில் ஆண்டுதோறும் அவரது நினைவு நாளில் நினைவு கூறுவது நமது கடமை, வாழ்க தினமலர் நிறுவனர் புகழ் வளர்க தினமலர் சேவை, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X