துணிச்சல், உண்மையை கற்றுக்கொடுத்தவர் டி.வி.ஆர்.: நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துணிச்சல், உண்மையை கற்றுக்கொடுத்தவர் டி.வி.ஆர்.: நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேச்சு

Added : அக் 03, 2021 | கருத்துகள் (1)
Share
மதுரை-''எனக்கு துணிச்சல், உண்மை, உத்வேகத்தை கற்றுக் கொடுத்தவர் 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையர். அவர் எனது முன்னேற்றத்திற்கான வழிகாட்டி,'' என நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசினார். 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பிறந்தநாளையொட்டி பாரதி யுவகேந்திரா சார்பில் பார்வையற்றோருக்கு இலவச அரிசி, சேவாரத்னா விருது வழங்கும் விழா மதுரையில் நடந்தது.விருதுநகர்
 துணிச்சல், உண்மையை கற்றுக்கொடுத்தவர் டி.வி.ஆர்.: நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேச்சு

மதுரை-''எனக்கு துணிச்சல், உண்மை, உத்வேகத்தை கற்றுக் கொடுத்தவர் 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையர். அவர் எனது முன்னேற்றத்திற்கான வழிகாட்டி,'' என நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசினார்.

'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பிறந்தநாளையொட்டி பாரதி யுவகேந்திரா சார்பில் பார்வையற்றோருக்கு இலவச அரிசி, சேவாரத்னா விருது வழங்கும் விழா மதுரையில் நடந்தது.விருதுநகர் அரசு மருத்துவமனை டீன் சங்குமணி தலைமை வகித்து பேசியதாவது:காந்தி பிறந்தநாளில் டி.வி.ராமசுப்பையர் பிறந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க போராடினார். நேர்மையானவர். கடின உழைப்பாளி. எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் சமூகத்திற்கு நல்லது செய்ய பாடுபட்டார் என்றார். நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசியதாவது: எனக்கு துணிச்சல், உண்மை, உந்துதல், உத்வேகத்தை கற்றுக் கொடுத்தவர் டி.வி.ராமசுப்பையர். எத்தனை அவதுாறுகள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் முன்னேற்ற வேண்டும் என எனக்கு வழிகாட்டியவர். ஒரு நாளிதழை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணம் டி.வி.ராமசுப்பையர்.சினிமா விளம்பரம் இல்லாமல் நடத்தப்படும் ஒரே நாளிதழ் 'தினமலர்'. குறைகளை துணிச்சலுடன் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறது என்றார்.விருதுநகர் சைபர் கிரம் ஏ.டி.எஸ்.பி., மணிவண்ணன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், ரோட்டரி முன்னாள் ஆளுநர் கண்ணன், மங்கையர்க்கரசி மில்ஸ் சேர்மன் கண்ணப்பச் செட்டியார், ஆடிட்டர் சேதுமாதவா, பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X