பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு

Added : அக் 03, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.திருச்சி கோட்ட ரயில்வே மேலாளராக மனீஷ் அகர்வால் புதிதாக பொறுப்பேற்றுள்ளார். இவர் நேற்று அதிகாலை 4:30 மணியளவில் திருச்சியில் இருந்து புதுச்சேரி நோக்கி, தனி ஆய்வு ரயில் மூலம் புறப்பட்டு வந்தார்.விழுப்புரம் ரயில் நிலையம் 4வது பிளாட்பாரத்திற்கு காலை 8:30 மணிக்கு வந்த அவர்,

விழுப்புரம் : விழுப்புரம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.திருச்சி கோட்ட ரயில்வே மேலாளராக மனீஷ் அகர்வால் புதிதாக பொறுப்பேற்றுள்ளார்.

இவர் நேற்று அதிகாலை 4:30 மணியளவில் திருச்சியில் இருந்து புதுச்சேரி நோக்கி, தனி ஆய்வு ரயில் மூலம் புறப்பட்டு வந்தார்.விழுப்புரம் ரயில் நிலையம் 4வது பிளாட்பாரத்திற்கு காலை 8:30 மணிக்கு வந்த அவர், பிளாட்பாரங்களில் உள்ள பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், டிக்கெட் கவுண்டர், பயணிகள் காத்திருப்போர் கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.பின், ரயில் இன்ஜின்களுக்கு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளும் இடத்தை பார்வையிட்டு, 4வது பிளாட்பாரம் முடிவில் மரக்கன்றுகளை நட்டார். முன்னதாக, மேலாளர் தலைமையில் ரயில்வே அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் காந்தி ஜெயந்தியை யொட்டி, உறுதிமொழியேற்றனர்.தொடர்ந்து, பிளாட்பாரத்தின் மேலே செல்லும் உயர்மின்னழுத்த மின் கம்பிகளை சில இடங்களில் மாற்றும் பணிகள் தொடர்பாக வரைபடத்தை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார். பின்னர், 9:15 மணிக்கு புதுச்சேரி புறப்பட்டு சென்றார். மண்டல பொறியாளர் கார்த்திகேயன், வணிக மேலாளர் செந்தில்குமார் உட்பட ரயில்வே அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X