பொது செய்தி

இந்தியா

'டெங்கு பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு தேவை'

Added : அக் 03, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ''டெங்கு இல்லாத புதுச்சேரியை உருவாக்கிட, மக்கள் சமூக பொறுப்புணர்வுடன் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்'' என சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:டெங்கு, உலகளவில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய உயிர்க்கொல்லி நோய். இது ஏடிஸ் கொசுவால் பரவும் வைரஸ் நோய். இவ்வகை கொசு, ஒரு வாரம்

புதுச்சேரி : ''டெங்கு இல்லாத புதுச்சேரியை உருவாக்கிட, மக்கள் சமூக பொறுப்புணர்வுடன் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்'' என சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:டெங்கு, உலகளவில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய உயிர்க்கொல்லி நோய். இது ஏடிஸ் கொசுவால் பரவும் வைரஸ் நோய். இவ்வகை கொசு, ஒரு வாரம் முதல் 10 நாள் வரை தேங்கியுள்ள சுத்தமான நீரில் இனப்பெருக்கம் செய்கிறது.புதுச்சேரியில் கடந்த 2017ம் ஆண்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது டெங்கு பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது.டெங்கு, சாதாரணமாக காய்ச்சல் அறிகுறிகளுடன் தானாகவே சரியாகிவிடும். அடுத்த நிலையை, உடலில் கண் புருவங்களுக்கு பின் தாங்க முடியாத அளவில் தலைவலி, மூட்டுகளை முறிக்கும் அளவில் வலியை ஏற்படுத்தும்.இக்காய்ச்சலை உருவாக்கும் வைரஸ், ரத்த அணுக்களில் ஒன்றான ரத்த தட்டுகள் எவ்வித அடியும் படாத நிலையில், ரத்த கசிவை உருவாக்குகிறது. கடைசியாக, உடலில் தண்ணீர் சத்து குறைவு காரணமாக ரத்த நாடி, ரத்த அழுத்தம் குறைகிறது. கடைசி இவ்விரு கட்டங்களும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை.டெங்கு காய்ச்சலுக்கு தனி சிகிச்சை கிடையாது. நோய் அறிகுறிகளுக்கான சிகிச்சையே அளிக்கப்படுகிறது.

டெங்கு காய்ச்சல் விட்டபிறகு, சரியாகிவிட்டது என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்கி, பாதிப்புகளை உடலில் நாம் உணராத வகையில் உருவாக்குவதால், காலதாமத சிகிச்சையால் உயிர்பலி ஏற்படுகிறது. டெங்கு பரவலை தடுக்க கொசுப்புழு ஒழிப்பு, புகை மருந்து தெளிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள், சமூக பொறுப்புணர்வோடு ஒருங்கிணைந்து பங்காற்றி, டெங்கு இல்லாத புதுச்சேரியை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X