பொது செய்தி

தமிழ்நாடு

131 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Added : அக் 03, 2021
Share
Advertisement
மதுரை -காந்தி ஜெயந்தியன்று தொழிலாளர்களுக்கு விடுமுறையளிக்காத மதுரையிலுள்ள 131 நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் தேசிய பண்டிகை, சிறப்புவிடுமுறை தினங்கள் சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம், மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டங்களின் கீழ் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.இச்சட்டங்களின்படி கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து

மதுரை -காந்தி ஜெயந்தியன்று தொழிலாளர்களுக்கு விடுமுறையளிக்காத மதுரையிலுள்ள 131 நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் தேசிய பண்டிகை, சிறப்புவிடுமுறை தினங்கள் சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம், மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டங்களின் கீழ் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.இச்சட்டங்களின்படி கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு காந்தி ஜெயந்தியன்றுவிடுமுறையளிக்க வேண்டும். வேலைசெய்ய அனுமதித்தால் உரிய படிவத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தொழிலாளர் அலுவலருக்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக வழங்க வேண்டும்.இதை செய்ய தவறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்)மைவிழிச்செல்வி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X