தமிழ்நாடு

தீபாவளி சிறப்பு கதர் விற்பனை கலெக்டர் துவக்கி வைப்பு

Added : அக் 03, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்தார்.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில், காந்தி ஜெயந்தியையொட்டி, அவரது படத்திற்கு மலர் தூவி, மரியாதை செலுத்தி, குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.இதுகுறித்து அவர் கூறுகையில், 'கள்ளக்குறிச்சி மாவட்ட கதர்
 தீபாவளி சிறப்பு கதர் விற்பனை கலெக்டர் துவக்கி வைப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில், காந்தி ஜெயந்தியையொட்டி, அவரது படத்திற்கு மலர் தூவி, மரியாதை செலுத்தி, குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.இதுகுறித்து அவர் கூறுகையில், 'கள்ளக்குறிச்சி மாவட்ட கதர் விற்பனை அங்காடி மூலம் தரமான அசல் கதர் பட்டுப் புடவை, கதர் வேட்டி, சட்டை, போர்வை, மெத்தை விரிப்புகள், சலவை சோப்புகள், தேன் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கதர் மற்றும் பட்டுப் புடவைகளுக்கு ஜி.எஸ்.டி., வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு 10 மாத தவனையில் கடன் வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடாக 82.11 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு, 83.60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்த ஆண்டு 82.11 லட்சம் ரூபாய்க்கு விற்பனை குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலக்கினை விட அதிகமாக விற்பனை நடந்திட, பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கதர் ஆடைகளை வாங்கி தீபாவளி சிறப்பு கதர் விற்பனைக்கு ஆதரவு தர வேண்டும்' என்றார்.நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், கதர் அங்காடி மேலாளர் கலியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X