ஏம்பலம் தொகுதி அ.தி.மு.க., ஆலோசனை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஏம்பலம் தொகுதி அ.தி.மு.க., ஆலோசனை

Added : அக் 03, 2021
Share
புதுச்சேரி : ஏம்பலம் தொகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.தொகுதி செயலர் சம்பத் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ராஜாராமன், இலக்கிய அணி செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தனர்.தொகுதி தலைவர் கண்ணன், இணை செயலர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், நடைபெற்ற சட்டசபை தேர்தலில், ஏம்பலம் தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற அ.தி.மு.க.,

புதுச்சேரி : ஏம்பலம் தொகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.தொகுதி செயலர் சம்பத் தலைமை தாங்கினார்.

மாநில துணைத் தலைவர் ராஜாராமன், இலக்கிய அணி செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தனர்.தொகுதி தலைவர் கண்ணன், இணை செயலர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், நடைபெற்ற சட்டசபை தேர்தலில், ஏம்பலம் தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற அ.தி.மு.க., வும் முக்கிய காரணம்.எனவே உள்ளாட்சி தேர்தலில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணியில் ஏம்பலம் தொகுதியில் அதிக கொம்யூன் பஞ்சாயத்து வார்டுகளை அ.தி.மு.க.,விற்கு ஒதுக்கிட வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு தொகுதி அ.தி.மு.க.,வினர் முழு மூச்சுடன் தேர்தல் பணியாற்றுவது என தீர்மானிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X