பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளி கதர் சிறப்பு விற்பனை துவக்க விழா

Added : அக் 03, 2021
Share
Advertisement
விழுப்புரம் : காந்தி ஜெயந்தியையொட்டி, தீபாவளி சிறப்பு கதர் விற்பனை துவக்க விழா விழுப்புரத்தில் நடந்தது.தமிழ்நாடு கதர் கிராமத் தொழில்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கி, தீபாவளி சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார்.பின்னர் அவர், கூறுகையில், 'காதிகிராப்டில் சிறப்பு விற்பனை 30 சதவீதம்
 தீபாவளி கதர் சிறப்பு விற்பனை துவக்க விழா

விழுப்புரம் : காந்தி ஜெயந்தியையொட்டி, தீபாவளி சிறப்பு கதர் விற்பனை துவக்க விழா விழுப்புரத்தில் நடந்தது.தமிழ்நாடு கதர் கிராமத் தொழில்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கி, தீபாவளி சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார்.

பின்னர் அவர், கூறுகையில், 'காதிகிராப்டில் சிறப்பு விற்பனை 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்கள், பொதுமக்கள் கதர் ஆடைகளை வாங்கி, கிராம நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.கடந்தாண்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடு 82.11 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு, இந்த குறியீட்டு இலக்கை விட அதிகமாக 83.60 லட்சம் ரூபாய் எட்டப்பட்டுள்ளது.

இந்தாண்டு, மாவட்டத்திற்கு 82.11 லட்சம் ரூபாய் விற்பனை குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என்றார்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் சங்கர், நகராட்சி கமிஷனர் சுரேந்திரஷா, காதிகிராப்ட் கண்காணிப்பாளர் நரேஷ்குமார், மேலாளர்கள் சிவனுபாண்டியன், ராசய்யா, உதயகுமார், உதவியாளர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னதாக காந்தி படத்திற்கு கலெக்டர் உள்ளிட்டோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X