பொது செய்தி

இந்தியா

காந்தி பிறந்த நாள் விழா: கவர்னர், முதல்வர் பங்கேற்பு

Added : அக் 03, 2021
Share
Advertisement
புதுச்சேரி : காந்தி பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு கவர்னர், முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.காந்தி பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. .புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடந்த விழாவில் சர்வமத பிரார்த்தனை, மத நல்லிணக்க பாடல்கள் இசைக்கப்பட்டது.கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள்

புதுச்சேரி : காந்தி பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு கவர்னர், முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.காந்தி பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. .
புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடந்த விழாவில் சர்வமத பிரார்த்தனை, மத நல்லிணக்க பாடல்கள் இசைக்கப்பட்டது.கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய் சரவணன் குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஆறுமுகம், ரமேஷ், கலெக்டர் பூர்வாகார்க் மற்றும் அதிகாரிகள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.காமராஜர் நினைவு தினத்தையொட்டி, ராஜா தியேட்டர் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு கவர்னர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்தனர்.பா.ஜ.,: கட்சி அலுவலகத்தில், மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், வெங்கடேசன், ரிச்சர்ட், பொதுச்செயலர் மோகன் குமார் உள்ளிட்டோர் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர், கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.வாசகர் வட்டம்: காந்தி பிறந்த நாளையொட்டி, அவரது வாழ்க்கை வரலாறு நுாலான சத்தியசோதனை புத்தகத்தை வாசகர் வட்ட செயலர் சம்பத்குமார், மாணவர்களுக்கு வழங்கினார்.பாரதிதாசன் அறக்கட்டளை: கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு அறக்கட்டளை தலைவர் பாரதி தலைமையில் மாலை அணிவித்தனர்.வாய்ஸ் பார் வாய்ஸ்லஸ்: விலங்கு நல அமைப்பு சார்பில் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, காந்தி நகரில் உள்ள தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X