பொது செய்தி

இந்தியா

புதுச்சேரி ரயில் நிலையம் மறுசீரமைப்பு திருச்சி கோட்ட பொது மேலாளர் தகவல்

Added : அக் 03, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி ரயில் நிலையம் மறு சீரமைப்பு திட்டம் இந்தாண்டிற்குள் துவங்கும் என, தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட பொது மேலாளர் மணீஷ் அகர்வால் தெரிவித்தார்.தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட பொது மேலாளர் மணீஷ் அகர்வால், நேற்று சிறப்பு ரயில் மூலம் புதுச்சேரி ரயில் நிலையம் வந்தார்.ரயில் நிலையத்தின் 4 பிளாட்பாரங்கள், பொறியாளர்கள் அறை, பயணிகள் வாகனம் நிறுத்தும் இடம்,


புதுச்சேரி : புதுச்சேரி ரயில் நிலையம் மறு சீரமைப்பு திட்டம் இந்தாண்டிற்குள் துவங்கும் என, தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட பொது மேலாளர் மணீஷ் அகர்வால் தெரிவித்தார்.

தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட பொது மேலாளர் மணீஷ் அகர்வால், நேற்று சிறப்பு ரயில் மூலம் புதுச்சேரி ரயில் நிலையம் வந்தார்.ரயில் நிலையத்தின் 4 பிளாட்பாரங்கள், பொறியாளர்கள் அறை, பயணிகள் வாகனம் நிறுத்தும் இடம், டிக்கெட் பரிசோதகர் தங்கும் அறை, நீட்டிக்கப்பட உள்ள சர்வீஸ் லைன் பாதை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். திருச்சி கோட்ட ரயில்வே துறை அதிகாரிகள், புதுச்சேரி ரயில் நிலைய மேலாளர் ஆகியோர் உடனிருந்தனர்.ஆய்வுக்கு பின்பு ரயில்வே பொது மேலாளர் மணீஷ் அகர்வால் அளித்த பேட்டி:சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடமாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியாகவும் புதுச் சேரி உள்ளது. புதுச்சேரி ரயில் நிலையத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி தருவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது. புதுச்சேரி ரயில் நிலையம் மறு சீரமைப்பு என்ற பெரிய திட்டத்தை மேற் கொள்ள, ரயில்வே வளர்ச்சி அத்தாரிட்டிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தாண்டு முடிவதற்குள் அப்பணிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது.புதுச்சேரி -கடலுார் புதிய ரயில் பாதை திட்டத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை. காரைக்கால் - பேரளம் ரயில் பாதை அமைக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.மாநில அரசு தொடர்பாக சில பிரச்னைகள் இருப்பதால், பணிகள் முழுமை பெறவில்லை. மாநில அரசுடன் பேசி வருவதால், அதன் திட்ட காலமான 2023ம் ஆண்டுக்குள் நிறைவடையும்.கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பொது மக்களுக்கு அத்தியாவசிய தேவையான ரயில்கள் மட்டும் இயக்கப்படுகிறது. ரயில் சேவையை முழுமையாக இயக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. புதிய ரயில்கள் இயக்கம் குறித்து, ரயில்வே அமைச்சகம் தான் முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X