கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 427 மையங்களில் இன்று தடுப்பூசி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 427 மையங்களில் இன்று தடுப்பூசி

Added : அக் 03, 2021
Share
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 427 மையங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.கொரோனா தொற்று 3 வது அலை ஏற்படும் முன், தமிழகத்தில் 18 வயது மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் அமைத்து அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களுக்கு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 427 மையங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

கொரோனா தொற்று 3 வது அலை ஏற்படும் முன், தமிழகத்தில் 18 வயது மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் அமைத்து அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நான்காவது சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், அங்கன்வாடி, அரசு பள்ளி என மொத்தம் 427 மையங்களில் நடைபெறும் இம்முகாமில் 41 ஆயிரத்து 200 பேருக்கு தடுப்பூசி செலுத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X