பொது செய்தி

இந்தியா

மணல் கடத்திய கும்பல் கைது

Added : அக் 03, 2021
Share
Advertisement
வில்லியனுார் : வில்லியனுார் சங்கராபரணி ஆற்றில் நள்ளிரவில் மணல் திருட்டில் ஈடுபட்ட ஒன்பது பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். மணல் திருட்டுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி., இயந்திரம், டிப்பர் லாரி மற்றும் இரு மோட்டார் பைக்குகளை பறிமுதல் செய்தனர்.வில்லியனுார் அடுத்த கோனேரிக்குப்பம் சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளை நடப்பதாக சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு நேற்று
 மணல் கடத்திய கும்பல் கைது

வில்லியனுார் : வில்லியனுார் சங்கராபரணி ஆற்றில் நள்ளிரவில் மணல் திருட்டில் ஈடுபட்ட ஒன்பது பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

மணல் திருட்டுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி., இயந்திரம், டிப்பர் லாரி மற்றும் இரு மோட்டார் பைக்குகளை பறிமுதல் செய்தனர்.வில்லியனுார் அடுத்த கோனேரிக்குப்பம் சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளை நடப்பதாக சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து, நள்ளிரவில் சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் இனியன், சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையிலான போலீசார், ஆற்றில் மணல் கடத்திக் கொண்டிருந்த கும்பலை சுற்றி வளைத்தனர்.

ஒன்பது பேர் பிடிபட்டனர். இருவர் தப்பிச் சென்றனர்.மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி., இயந்திரம், டிப்பர் லாரி, இரு மோட்டார் பைக்குகளை பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களை வில்லியனுார் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், பிடிபட்டவர்கள் ஜே.சி.பி., ஆப்பரேட்டர் வானுார் தாலுகா குயிலாப்பாளையம் குமார் மகன் தயாநிதி(23), லாரி டிரைவர் வாதானுார் வேலாயுதம்(28), ரவி(37), மேட்டுப்பாளையம் ராஜசேகர்(35), முத்திரையர்பாளையம் காந்தி திருநல்லுார் கணேசன்(33), குச்சிப்பாளையம் ரவீந்திரன்(32), செல்வம்(43), உளவாய்க்கால் சரவணன் மகன்கள் கலைச்செல்வன்(22), அரவிந்தன்(19) என தெரிய வந்தது. இவர்கள் மீது வழக்கு பதிந்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X