பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 1,000 இடங்களில் தடுப்பூசி முகாம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், நுாறு சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசியதாவது;விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 11 லட்சத்து 3 ஆயிரத்து 388 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதை தொடர்ந்து இன்று 3ம் தேதி நான்காவது முறையாக

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், நுாறு சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசியதாவது;விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 11 லட்சத்து 3 ஆயிரத்து 388 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதை தொடர்ந்து இன்று 3ம் தேதி நான்காவது முறையாக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மாவட்டத்தில் 1,000 இடங்களில் நடக்கிறது. இதில் 70 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனவே, பொதுமக்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொண்டு நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்' என்றார்.டி.ஆர்.ஓ., ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் சங்கர், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X