பொது செய்தி

இந்தியா

பணியில் சேராத காவலர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை

Added : அக் 03, 2021
Share
Advertisement
புதுச்சேரி : இடமாற்றம் செய்தும் பணியில் சேராத போலீசாருக்கு வாக்கி டாக்கி மூலம் இறுதி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி காவல் துறையில் கடந்தாண்டு முதல், எட்டு இடமாற்றல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.அதில், பெரும்பாலானோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பணியில் சேர்ந்தனர். ஆனால், உதவி சப் இன்ஸ்பெக்டர், ஏட்டு, காவலர் என 125 பேர்

புதுச்சேரி : இடமாற்றம் செய்தும் பணியில் சேராத போலீசாருக்கு வாக்கி டாக்கி மூலம் இறுதி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி காவல் துறையில் கடந்தாண்டு முதல், எட்டு இடமாற்றல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.அதில், பெரும்பாலானோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பணியில் சேர்ந்தனர். ஆனால், உதவி சப் இன்ஸ்பெக்டர், ஏட்டு, காவலர் என 125 பேர் பல்வேறு காரணங்களை கூறி, மாறுதல் செய்யப்பட்ட இடத்தில் பணியில் சேரவில்லை.உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், இது ரோந்து பணியில் சிக்கலை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஏ.டி.ஜி.பி.,யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.அதை தொடர்ந்து நேற்றிரவு 8.40 மணியளவில், காவல் துறையின் வாக்கி டாக்கி மூலம் பணியில் சேராத போலீசாருக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

அதில், இட மாறுதல் உத்தரவு பெற்ற போலீசார் இன்று 3ம் தேதிக்குள் தங்களுக்கான பணியிடத்தில் சேர வேண்டும். சேரவில்லை என்றால் அதற்கான காரணத்தை 4ம் தேதி காலை சமர்ப்பிக்க வேண்டும். இந்த உத்தரவை ஏ.டி.ஜி.பி., ஆனந்த மோகன் பிறப்பித்து உள்ளார் என தெரிவித்து, இடம் மாற்றம் செய்யப்பட்ட போலீசாரின் பட்டியலும் படிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து, இடமாற்றம் செய்யப்பட்டவர்களை உடனே விடுவிப்பதாக, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X