பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லுாரியில் இறுதி கட்ட கலந்தாய்வு

Added : அக் 03, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் வரும் 5 மற்றும் 7 தேதிகளில் இறுதி கட்ட கலந்தாய்வு நடைபெறுவதாக கல்லுாரி முதல்வர் மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:கல்லுாரியில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., , பி.எஸ்சி., கணிதம், வேதியியல், இயற்பியல், கணினி அறிவியல் ஆகிய 7 இளங்கலை பாடப்பிரிவுகளும், எம்.ஏ., ஆங்கிலம், எம்.காம்., எம்.எஸ்சி., கணிதம், கணினிஅறிவியல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் வரும் 5 மற்றும் 7 தேதிகளில் இறுதி கட்ட கலந்தாய்வு நடைபெறுவதாக கல்லுாரி முதல்வர் மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:கல்லுாரியில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., , பி.எஸ்சி., கணிதம், வேதியியல், இயற்பியல், கணினி அறிவியல் ஆகிய 7 இளங்கலை பாடப்பிரிவுகளும், எம்.ஏ., ஆங்கிலம், எம்.காம்., எம்.எஸ்சி., கணிதம், கணினிஅறிவியல் ஆகிய 4 முதுகலை பாடப்பிரிவுகளும் உள்ளன.இதில் கலை பாட பிரிவுகளுக்கான இறுதி கட்ட கலந்தாய்வு வரும் 5ம் தேதியும், அறிவியல் பாடங்களுக்கான இறுதி கட்ட கலந்தாய்வு வரும் 7 ம் தேதியும் நடக்கிறது. சின்னசேலம் அடுத்த கனியாமூர் ஒளி மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் கலந்தாய்வு நடக்கிறது.கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள், அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், 5 புகைப்படம் மற்றும் கல்லுாரி கட்டணம் எடுத்து வர வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X