நிதி நிறுவன அதிபரை சூழ்ந்த வாடிக்கையாளர்கள்

Added : அக் 03, 2021
Share
Advertisement
புதுச்சேரி : முதலீட்டு பணத்தை திருப்பிக் கேட்டு, சென்னையைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபரை, புதுச்சேரி வாடிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.சென்னையைச் சேர்ந்தவர் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில், புதுச்சேரியை சேர்ந்த பலர் முதலீடு செய்தனர்.கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு முதிர்வு தொகையை கொடுக்கவில்லை.இந்த நிலையில் நேற்று

புதுச்சேரி : முதலீட்டு பணத்தை திருப்பிக் கேட்டு, சென்னையைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபரை, புதுச்சேரி வாடிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.

சென்னையைச் சேர்ந்தவர் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில், புதுச்சேரியை சேர்ந்த பலர் முதலீடு செய்தனர்.கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு முதிர்வு தொகையை கொடுக்கவில்லை.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, நிதி நிறுவன உரிமையாளர், புதுச்சேரி, 45 அடி சாலை, காமராஜர் சாலை சந்திப்பு அருகில் உள்ள தனது ஏஜென்சியின் முகவரை சந்திக்க வந்தார்.

இதை அறிந்த புதுச்சேரி வாடிக்கையாளர்கள் அங்கு சென்று, அவரை சூழ்ந்து கொண்டு, முதலீடு பணத்தை திருப்பிக் கேட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பெரியக்கடை போலீசார், இரு தரப்பினரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, பேசினர். மூன்று மாதங்களுக்குள் பணத்தை தருவதாக கூறியதால் உடன்பாடு ஏற்பட்டது. அதையடுத்து, இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X