பொது செய்தி

இந்தியா

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

Added : அக் 03, 2021
Share
Advertisement
கண்டமங்கலம் : கண்டமங்கலத்தில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் இரண்டரரை சவரன் தங்க செயினை வாலிபர்கள் பறித்துச் சென்றனர்.விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன் மனைவி சாவித்திரி (64). சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய்க்கு சிகிச்சை பெற, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, காலை 11.00 மணியளவில் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து

கண்டமங்கலம் : கண்டமங்கலத்தில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் இரண்டரரை சவரன் தங்க செயினை வாலிபர்கள் பறித்துச் சென்றனர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன் மனைவி சாவித்திரி (64). சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய்க்கு சிகிச்சை பெற, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, காலை 11.00 மணியளவில் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார்.உடல் சோர்வால், சாலையோரம் தரையில் அமர்ந்தார். மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த இரு வாலிபர்கள், மயக்க நிலையில் அமர்ந்திருந்த மூதாட்டி சாவித்திரி கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு, தப்பிச் சென்றனர். கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X