பொது செய்தி

இந்தியா

காந்தி ஜெயந்தி தினத்தில் ரூ.1.56 லட்சம் அபராதம் வசூல்

Added : அக் 03, 2021
Share
Advertisement
புதுச்சேரி : காந்தி ஜெயந்தி தினத்தில் கள்ளத்தனமாக மதுபானம் விற்ற 18 பேர் மீது வழக்கு பதிந்து, ரூ.1.56 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று புதுச்சேரியில் அனைத்து மதுபானக் கடை, கள்ளு, சாராயக்கடைகள் மூடப்பட வேண்டும் என கலால் துறை உத்தரவிட்டது. ஆனால், சில இடங்களில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக, கலால் துறைக்கு தகவல்
 காந்தி ஜெயந்தி தினத்தில்   ரூ.1.56 லட்சம் அபராதம் வசூல்


புதுச்சேரி : காந்தி ஜெயந்தி தினத்தில் கள்ளத்தனமாக மதுபானம் விற்ற 18 பேர் மீது வழக்கு பதிந்து, ரூ.1.56 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று புதுச்சேரியில் அனைத்து மதுபானக் கடை, கள்ளு, சாராயக்கடைகள் மூடப்பட வேண்டும் என கலால் துறை உத்தரவிட்டது. ஆனால், சில இடங்களில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக, கலால் துறைக்கு தகவல் சென்றது.அதையடுத்து, 3 பறக்கும்படை அமைத்து, நகர மற்றும் கிராமப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், பாகூர், வில்லியனுார், திருக்கனுார், திருபுவனை, தவளக்குப்பம், காட்டேரிக்குப்பம் மற்றும் நகரப்பகுதியில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த 18 பேர் சிக்கினர்.அவர்கள் மீது வழக்கு பதிந்து, 175.56 லிட்டர் மதுபானம் மற்றும் 64.68 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 50 ஆயிரம்.வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களிடம் இருந்து அபராதமாக ரூ. 1.56 லட்சம் வசூலித்து, அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X