சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் அடித்துக் கொலை

Added : அக் 03, 2021
Share
Advertisement
சங்கராபுரம் : பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் வாலிபரை அடித்துக் கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த வடசிறுவளுர் காலனியைச் சேர்ந்தவர் முனியன், 65; இவர், 2019ல் மகள் திருமணத்திற்கு அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் செல்வம், 45; என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.நான்கு மாதங்களுக்கு முன் முனியன், தான் வாங்கிய

சங்கராபுரம் : பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் வாலிபரை அடித்துக் கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த வடசிறுவளுர் காலனியைச் சேர்ந்தவர் முனியன், 65; இவர், 2019ல் மகள் திருமணத்திற்கு அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் செல்வம், 45; என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.நான்கு மாதங்களுக்கு முன் முனியன், தான் வாங்கிய பணத்தை வட்டியுடன் செல்வத்திடம் வழங்கியுள்ளார், ஆனால் செல்வம், வட்டியில் இன்னும் 6,000 ரூபாய் பாக்கி இருப்பதாகக் கூறி முனியனிடம் கேட்டு வந்துள்ளார்.நேற்று முன்தினம் 1ம் தேதி செல்வம் மற்றும் அவரது உறவினர் பழனி ஆகியோர் முனியன் வீட்டிற்குச் சென்று 6,000 ரூபாய் பாக்கியைக் கேட்டுள்ளனர்.

அப்போது முனியன் மகன் விஜயகுமார், 22; (திருமணம் ஆகாதவர்) அசல், வட்டி என முழுதும் பைசல் செய்து விட்டோம். இனி பணம் தர முடியாது என கூறியுள்ளார்.இதனால், ஏற்பட்ட தகராறில் செல்வம், பழனி சேர்ந்து கட்டையால் விஜயகுமாரை சரமாரியாக தாக்கினர். தலையில் பலத்த காயமடைந்த விஜயகுமார் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அன்று நள்ளிரவு 1:00 மணியளவில் இறந்தார். முனியன் புகாரின் பேரில், சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப் பதிந்து செல்வம், 45; பழனி, 41; ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலை தொடர்பாக வடசிறுவளுரில் பதற்றம் நிலவுவதால் சப் இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X