பொது செய்தி

தமிழ்நாடு

நிதி நிறுவன ஊழியர் தற்கொலை உடலை வாங்க மறுத்து மறியல்

Added : அக் 03, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடத்த பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மாசிலாமணி மகன் கனகராஜ், 28; இவர், உளுந்துார்பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.நான்கு நாட்களுக்கு முன் 1.50 லட்சம் ரூபாய்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடத்த பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மாசிலாமணி மகன் கனகராஜ், 28; இவர், உளுந்துார்பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.நான்கு நாட்களுக்கு முன் 1.50 லட்சம் ரூபாய் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கனகராஜ், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் வீட்டில் துாக்குப் போட்டுக் கொண்டார்.உடன், அவரை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கனகராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும், கனகராஜ் உடல், பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.கனகராஜ் இறப்புக்கு நிதி நிறுவன மேலாளர் வெங்கடேசன்தான் காரணம் என கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனகராஜ் உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோர் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு நேற்று மாலை 5:00 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து 5:30 மணியளவில் மறியலை கைவிட்டனர். அதனைத் தொடர்ந்து இரவு 7:30 மணியளவில் உடலை பெற்றுச் சென் றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X