பொது செய்தி

தமிழ்நாடு

வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய போலி டி.எஸ்.பி., கைது

Added : அக் 03, 2021
Share
Advertisement
பண்ருட்டி : பண்ருட்டி அருகே ஊர்காவல் படையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த போலி டி.எஸ்.பி.,யை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம் , ரெட்டிச்சாவடி அடுத்த பெரியகாட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபிகேராமன். இவரது மகன் கவுதம்,22; பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிக்காமல் உள்ளார். இவர் பண்ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டு கிராமத்திற்கு
 வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய போலி  டி.எஸ்.பி., கைது

பண்ருட்டி : பண்ருட்டி அருகே ஊர்காவல் படையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த போலி டி.எஸ்.பி.,யை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம் , ரெட்டிச்சாவடி அடுத்த பெரியகாட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபிகேராமன். இவரது மகன் கவுதம்,22; பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிக்காமல் உள்ளார். இவர் பண்ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டு கிராமத்திற்கு வட்டிக்கு பணம் வசூல் செய்ய டிப்டாப் உடையணிந்து வருவார்.அப்போது கீழ்கவரப்பட்டு மகாதேவன், அவரது உறவினர் மணி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. கவுதம் தான் ஊர் காவல்படையில் பெரிய பொறுப்பில் உள்ளதாகவும், தன்னிடம் ரூ. 30 ஆயிரம் கொடுத்தால் ஊர்காவல் படையில் வேலை வாங்கி தருவதாகவும், மாதம் ரூ. 15 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் என கூறினார். இதனை நம்பி மகாதேவன் தனது மைத்துனர் தீர்த்தமலை, மணி மகன் ஸ்ரீநாத் ஆகியோருக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 50 ஆயிரம் கொடுத்தனர்.

ஆனால் வேலை வாங்கி தராததால் கடந்த 1ம் தேதி மகாதேவன் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் தீபன், போலீசார் ஆனந்த், சபரி, வேல்முருகன் ஆகியோர் நேற்று கீழ்கவரப்பட்டு வந்த கவுதமை கைது செய்தனர். விசாரணையில், ஊர்காவல் படையில் வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கியதை ஒப்புக் கொண்டார். அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்து, ரூ. 10 ஆயிரம் மற்றும் டி.எஸ்.பி.க்கான சீருடை, ஊர்காவல் படையில் சேருவதற்கான போலி உத்தரவு நகல் தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், ஆகியவற்றை பறிமுதல் செய் தனர். மேலும் தனக்கு டி.எஸ்.பி., வேலை கிடைத்து விட்டது என டி.எஸ்.பி., சட்டை அணிந்து நண்பர்களுக்கு ஸ்வீட் வழங்கியதும், சிலருக்கு வேலை வாங்கி தருவதாக ஏமாற்ற முயற்சி செய்ததும் தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X