பொது செய்தி

தமிழ்நாடு

வெலிங்டன் ஏரி துார்வாரப்படும்: அமைச்சர் கணேசன் உறுதி

Added : அக் 03, 2021
Share
Advertisement
திட்டக்குடி : திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.விழாவிற்கு விருத்தாசலம் சப் கலெக்டர் (பொறுப்பு) செல்லபாண்டி தலைமை தாங்கினார். திட்டக்குடி தாசில்தார் தமிழ்ச்செல்வி வரவேற்றார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் பங்கேற்று மரக்கன்றை நட்டார். அவர் பேசுகையில், திட்டக்குடி தொகுதி விவசாயிகளின் நீண்ட நாள்
 வெலிங்டன் ஏரி துார்வாரப்படும்: அமைச்சர் கணேசன் உறுதி

திட்டக்குடி : திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

விழாவிற்கு விருத்தாசலம் சப் கலெக்டர் (பொறுப்பு) செல்லபாண்டி தலைமை தாங்கினார். திட்டக்குடி தாசில்தார் தமிழ்ச்செல்வி வரவேற்றார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் பங்கேற்று மரக்கன்றை நட்டார். அவர் பேசுகையில், திட்டக்குடி தொகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள வெலிங்டன் ஏரியின் கரை பலப்படுத்தப்படும்.

100 ஆண்டுகளாக துார்வாராத வெலிங்டனை துார்வாரி ஆழப்படுத்தப்படும். வாய்க்கால்கள் அனைத்தும் துார்வாரப்பட்டு கடைமடை வரை விவசாயத்திற்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். திட்ட மதிப்பீடு தயார் செய்து முதல்வரின் அனுமதி பெற்று விரைவில் பணிகள் துவங்கும், என்றார்.பின், இலவச வீட்டுமனை, மூன்று சக்கர சைக்கிள் உட்பட ரூ. 14 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரவிச்சந்திரன், மண்டல துணை தாசில்தார் ஜெயச்சந்திரன், தி.மு.க.,ஒன்றிய செயலர் அமிர்தலிங்கம், நகரசெயலர் பரமகுரு உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X