காந்தி கோவிலில் சிறப்பு வழிபாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காந்தி கோவிலில் சிறப்பு வழிபாடு

Added : அக் 03, 2021
Share
விருத்தாசலம் : காந்தி ஜெயந்தியையொட்டி, விருத்தாசலம் அருகே காந்தி கோவிலில், தேசபக்தியுடன் கிராம மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தில், சுதந்திர போராட்ட தியாகி ஜம்புலிங்கம், 1948ம் ஆண்டு, காந்தியின் அஸ்தியை வைத்து, அவருக்கு கோவில் கட்டினார். ஆன்டுதோறும், காந்தி ஜெயந்தியன்று, கிராம மக்கள் கோவிலில் உள்ள சிலைக்கு மலர் துாவி வழிபாடு செய்வது

விருத்தாசலம் : காந்தி ஜெயந்தியையொட்டி, விருத்தாசலம் அருகே காந்தி கோவிலில், தேசபக்தியுடன் கிராம மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தில், சுதந்திர போராட்ட தியாகி ஜம்புலிங்கம், 1948ம் ஆண்டு, காந்தியின் அஸ்தியை வைத்து, அவருக்கு கோவில் கட்டினார்.

ஆன்டுதோறும், காந்தி ஜெயந்தியன்று, கிராம மக்கள் கோவிலில் உள்ள சிலைக்கு மலர் துாவி வழிபாடு செய்வது வழக்கம்.மகாத்மா காந்தியின் 153 வது பிறந்தநாளையொட்டி, கிராம மக்கள் நேற்று வழிபாடு செய்தனர். பொதுமக்களுக்கு இனிப்பு, பிரசாதம் வழங்கப்பட்டது.காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, சுதந்திர போராட்டத்தில் அவரது பங்கு உள்ளிட்டவைகளை நினைவு கூர்ந்து கிராம இளைஞர்கள் வணங்கி வழிபாடு செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X