காந்தி ஜெயந்தியொட்டி மரக்கன்று நடும் நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காந்தி ஜெயந்தியொட்டி மரக்கன்று நடும் நிகழ்ச்சி

Added : அக் 03, 2021
Share
விருத்தாசலம் : விருந்தாசலம் மணலுார் - மங்கலம்பேட்டை சாலையில், மரக்கன்றுகள் நடும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். விருத்தாசலம் மணலுார் - மங்கலம்பேட்டை சாலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், 500 புங்கை, பூவரசு, நாவல், அரச மரக்கன்றுகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக, மு.பட்டி - கோணாங்குப்பம் வரை 250 மரக்கன்றுகள் நடப்பட்டன. நேற்று மணலுார்
 காந்தி ஜெயந்தியொட்டி மரக்கன்று நடும் நிகழ்ச்சி

விருத்தாசலம் : விருந்தாசலம் மணலுார் - மங்கலம்பேட்டை சாலையில், மரக்கன்றுகள் நடும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விருத்தாசலம் மணலுார் - மங்கலம்பேட்டை சாலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், 500 புங்கை, பூவரசு, நாவல், அரச மரக்கன்றுகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக, மு.பட்டி - கோணாங்குப்பம் வரை 250 மரக்கன்றுகள் நடப்பட்டன. நேற்று மணலுார் - எருமனுார் வரை 250 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் எருமனுார் ஊராட்சி தலைவர் சவுமியா வீரமணி மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார். வி.இ.டி., தலைமை ஆசிரியர் வீரராகவன், சாலை ஆய்வாளர் அருணகிரி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். சிறுபாக்கம்: சிறுபாக்கத்தில் நடந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் கவிதா விஜயகுமார் தலைமை தாங்கினார்.

துணைத் தலைவர் மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் பாப்பாத்தி ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் பாபுதுரை வரவேற்றார். மங்களூர் பி.டி.ஓ.,க்கள் சண்முக சிகாமணி மற்றும் தண்டபாணி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் மனோகரன், கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்வேப்பூர்: வேப்பூர் தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தாசில்தார் செல்வமணி தலைமை தாங்கினார். ஈரம் நிலம் அமைப்பு தலைவர் தமிழரசன், துணைத் தாசில்தார்கள் ராமர், மஞ்சுளா முன்னிலை வகித்தனர். வி.ஏ.ஓ., ராஜாமணி வரவேற்றார். வருவாய் ஆய்வாளர் காஞ்சனா உட்பட பலர் பங்கேற்றனர்.பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் ஊராட்சி சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பழனியம்மாள் முன்னிலை வகித்தார். மரக்கன்றுகளை, உதவி செயற்பொறியாளர் குமுதம், பி.டி.ஓ., சிவஞானசுந்தரம் ஆகியோர் நட்டனர்.

இன்ஜினியர் செல்வமணி, தலைமை ஆசிரியை கயல்விழி, வி.ஏ.ஓ., வனிதா, ஊராட்சி செயலர் ராஜீவ்காந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அரசுப்பள்ளியில் காந்தியின் படத்திற்கு அஞ்சலி செலுத்தி, தலைமை ஆசிரியர் கொளஞ்சியப்பன் மற்றும் ஆசிரியர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X