பொது செய்தி

தமிழ்நாடு

காந்தி சிலை காலடியில் மனு வைத்த சங்கத்தினர்

Added : அக் 03, 2021
Share
Advertisement
சிதம்பரம் : சிதம்பரத்தில் காந்தி சிலையின் காலடியில் கோரிக்கை மனு வைத்து வேண்டிய ஓய்வூதிய நலச்சங்கத்தினரின் செயல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.கடலுார் மாவட்டம், சிதம்பரம் பஸ் நிலையம் அருகில் உள்ள காந்தி சிலைக்கு நேற்று காந்தி ஜெயந்தியையெட்டி பல்வேறு தரப்பினர் மாலையணிவித்தனர். தமிழ்நாடு ஓய்வூதிய நலச் சங்க கூட்டமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் வேணுகோபால்
 காந்தி சிலை காலடியில்  மனு வைத்த சங்கத்தினர்

சிதம்பரம் : சிதம்பரத்தில் காந்தி சிலையின் காலடியில் கோரிக்கை மனு வைத்து வேண்டிய ஓய்வூதிய நலச்சங்கத்தினரின் செயல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் பஸ் நிலையம் அருகில் உள்ள காந்தி சிலைக்கு நேற்று காந்தி ஜெயந்தியையெட்டி பல்வேறு தரப்பினர் மாலையணிவித்தனர். தமிழ்நாடு ஓய்வூதிய நலச் சங்க கூட்டமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் வேணுகோபால் காந்தி சிலையின் பாதத்தில் கோரிக்கை மனு வைத்தார்.அந்த மனுவில், வறுமையில் வாடும் ஓய்வூதியர்களை காக்க வேண்டும். தமிழகத்தில் ஒய்வூதியம் பெறும் அனைவருக்கும் குறைந்த பட்சம் மாதம் ரூ. 9,000 வழங்க வேண்டும். ஆண்டுதோறும் பஞ்சபடியை உயர்த்தி வழங்க வேண்டும்.

மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கூறியிருந்தனர். இச்சம்பவம்அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து வேணுகோபால் கூறுகையில், எங்களுக்கு முறையான ஓய்வு ஊதியம் இல்லை. அரசுக்கு கோரிக்கை வைத்தும், நடவடிக்கை இல்லை. வறுமையில் வாழும் நாங்கள் காந்தி ஜெயந்தியன்று, அவரின் பாதத்தில் கோரிக்கை மனு வைத்துள்ளோம். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X