பொது செய்தி

தமிழ்நாடு

குணமங்கலத்தில் கிராம சபை கூட்டம் 2 மணி நேரம் தரையில் அமர்ந்த கலெக்டர்

Added : அக் 03, 2021
Share
Advertisement
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அடுத்த குணமங்கலம் ஊராட்சியில் நேற்று கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.இதில் டி.ஆர்.ஓ.,ரஞ்சித்சிங் ஆர்.டி.ஓ.அதியமான் கவியரசு மகளிர் திட்ட அலுவலர் வடிவு ஊராட்சி தலைவர் முருகவள்ளி உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அதிகாரிகள் விளக்கினர். கோவில்
 குணமங்கலத்தில் கிராம சபை கூட்டம் 2 மணி நேரம் தரையில் அமர்ந்த கலெக்டர்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அடுத்த குணமங்கலம் ஊராட்சியில் நேற்று கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.

இதில் டி.ஆர்.ஓ.,ரஞ்சித்சிங் ஆர்.டி.ஓ.அதியமான் கவியரசு மகளிர் திட்ட அலுவலர் வடிவு ஊராட்சி தலைவர் முருகவள்ளி உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அதிகாரிகள் விளக்கினர். கோவில் நிலங்களை மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு விவசாயம் செய்ய வழங்க வேண்டுமென பெண்கள் கோரினர்.நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் பாலசுப்ரமணியம் பேசுகையில், கிராமசபை கூட்டங்களே மக்கள் ஆட்சியின் அடித்தளமாகும். அரசு திட்டங்கள் அனைத்தும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது

நேர்மையாக செயல்படுகிறதா என மக்கள் கண்காணிக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் மூலமாக 2 லட்சத்து 4 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம், என்றார்.100 சதவீதம் மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதற்காக குணமங்கலம் ஊராட்சி தலைவர் முருகவள்ளிக்கு சான்று வழங்கினார். கூட்டம் துவங்கிய காலை 10 மணி முதல் கூட்டம் முடிந்த மதியம் 12 மணி வரை கலெக்டர் மக்களோடு தரையில் அமர்ந்து கூட்டத்தை நடத்தினார்.கலெக்டர் காலில் விழுந்து கதறிய பெண்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X