உண்டியலை உடைத்து கொள்ளை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உண்டியலை உடைத்து கொள்ளை

Added : அக் 03, 2021
Share
குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். குறிஞ்சிப்பாடி, சின்னக்கடை தெருவில் விநாயகர் மற்றும் சிவன் கோவில்களின் உண்டியல் பூட்டை கடந்த 30ம் தேதி மர்ம நபர் உடைத்து பணம் திருடிச் சென்றார். குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து அப்பகுதியில் இருந்த 'சிசிடிவி' யில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை

குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

குறிஞ்சிப்பாடி, சின்னக்கடை தெருவில் விநாயகர் மற்றும் சிவன் கோவில்களின் உண்டியல் பூட்டை கடந்த 30ம் தேதி மர்ம நபர் உடைத்து பணம் திருடிச் சென்றார். குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து அப்பகுதியில் இருந்த 'சிசிடிவி' யில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.இதில், சிதம்பரம், வசப்புத்துாரைச் சேர்ந்த கணேசன் மகன் பாலாஜி, 20; என தெரிந்தது. குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் நேற்று நின்றிருந்த அவரை கைது செய்து ரூ. 2,645, பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X