பொது செய்தி

இந்தியா

நாட்டில் இதுவரை 90.45 கோடி 'டோஸ்' தடுப்பூசி

Updated : அக் 03, 2021 | Added : அக் 03, 2021
Share
Advertisement
புதுடில்லி-நாட்டில் 90.45 கோடிக்கும் மேல் தடுப்பூசி 'டோஸ்'கள் செலுத்தப்பட்டு உள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறி உள்ளார்கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜன., 16ல் துவங்கியதுடன் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி விரைவாக நகர்ந்தது.நேற்று ஒரே நாளில், இரவு 7:00 மணி வரை 70 லட்சத்திற்கும் மேற்பட்ட டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதனால் இதுவரை

புதுடில்லி-நாட்டில் 90.45 கோடிக்கும் மேல் தடுப்பூசி 'டோஸ்'கள் செலுத்தப்பட்டு உள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறி உள்ளார்



latest tamil news


கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜன., 16ல் துவங்கியதுடன் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி விரைவாக நகர்ந்தது.நேற்று ஒரே நாளில், இரவு 7:00 மணி வரை 70 லட்சத்திற்கும் மேற்பட்ட டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதனால் இதுவரை செலுத்தப்பட்ட ஒட்டுமொத்த தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 90.45 கோடியை கடந்துள்ளது.


latest tamil news


இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிக்கை:இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ் 90.45 கோடியை கடந்துள்ளது. ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகளை வாழ்த்தும் 'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' கோஷத்தை லால் பகதுார் சாஸ்திரி முன்வைத்தார். அறிவியலுக்கான 'ஜெய் விக்யான்' கோஷம் வாஜ்பாய் வழங்கியது.ஆராய்ச்சிகளை பாராட்டும் வகையில் 'ஜெய் அனுசந்தன்' கோஷத்தை பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கினார். ஆராய்ச்சிகளின் வெற்றியே, தற்போது மக்களை விரைவாக சென்றடையும் கொரோனா தடுப்பூசி.இவ்வாறு அதில் கூறப்பட்ள்ளது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X