பொது செய்தி

தமிழ்நாடு

சிதம்பரம் பகுதியில் காந்தி ஜெயந்தி விழா

Added : அக் 03, 2021
Share
Advertisement
சிதம்பரம் : சிதம்பரம் பகுதியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.சிதம்பரம் வீனஸ் குழும பள்ளிகளில் நடந்த விழாவிற்கு பள்ளி தாளாளர் வீனஸ் குமார் தலைமை தாங்கினார். முதல்வர் ரூபியாள் ராணி, டாக்டர் லியோனா, பொறியாளர் அருண் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் டி.எஸ்.பி, ரமேஷ்ராஜ் பங்கேற்று காந்தி படத்திற்கு மாலையணிவித்து, மரக்கன்றுகள் நட்டார். துணை முதல்வர் அறிவழகன்
 சிதம்பரம் பகுதியில் காந்தி ஜெயந்தி விழா

சிதம்பரம் : சிதம்பரம் பகுதியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.சிதம்பரம் வீனஸ் குழும பள்ளிகளில் நடந்த விழாவிற்கு பள்ளி தாளாளர் வீனஸ் குமார் தலைமை தாங்கினார்.

முதல்வர் ரூபியாள் ராணி, டாக்டர் லியோனா, பொறியாளர் அருண் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் டி.எஸ்.பி, ரமேஷ்ராஜ் பங்கேற்று காந்தி படத்திற்கு மாலையணிவித்து, மரக்கன்றுகள் நட்டார். துணை முதல்வர் அறிவழகன் வரவேற்றார். ஆசிரியர்கள் மகேஷ், ஜெயந்தி, கலாதரன் பங்கேற்றனர். நித்யா நன்றி கூறினார். சிதம்பரம் ஷெம்போர்டு பியூச்சரிஸ்டிக் சி.பி.எஸ்.சி., பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் சத்தியபிரியா ஹரிகிருஷ்ணன், முதல்வர் லதா ஆகியோர் காந்தி சிலைக்கு மாலையணிவித்தனர். சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் ஸ்ரீனிவாசன் 500 மரக்கன்றுகள் வழங்கினார். மண்டல துணை ஆளுனர் தீபக் குமார் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. ரோட்டரி செயலாளர் ராஜசேகரன், உறுப்பினர்கள் டேவிட் ஏகாம்பரம், கரிகாலச்சோழன் பங்கேற்றனர்.

காங்., கட்சி சார்பில் ஆர்.டி.ஐ., துறை சார்பில் காந்தி மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்து. ஆர்.டி.ஐ., துறை மாநில பொது செயலாளர் ஸ்டீபன் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார். ராஜா சம்பத் குமார் வரவேற்றார். சம்மந்தமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் நுார் அலி, சிறுபான்மைப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் டேனியல் சந்துரு, ஊடகப்பிரிவு சிவசக்திராஜா, குமரவேல், மணிமாறன் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர் ராதா கிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கிள்ளை சத்தியமூர்த்தி ஆகியோர் காந்தி மற்றும் ராஜிவ் சிலைக்கும், தில்லை மக்கின், ஜெமினி ராதா ஆகியோர் காமராஜர் சிலைக்கும் மாலையணிவித்தனர். குமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X