பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் பெருமாள் கோவில்களில்

Added : அக் 03, 2021
Share
Advertisement
கடலுார் : புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று கடலுாரில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் வழிபாடு நடந்தது.கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திருப்பாதிரிபுலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூமிதேவி, ஆண்டாள் சமேத வரதராஜ பெருமாள், புதுப்பாளையம்
 கடலுார் பெருமாள் கோவில்களில்

கடலுார் : புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று கடலுாரில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் வழிபாடு நடந்தது.

கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திருப்பாதிரிபுலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூமிதேவி, ஆண்டாள் சமேத வரதராஜ பெருமாள், புதுப்பாளையம் ராஜகோபல சுவாமி, தாயாருடன் சிறப்பு அலங்காரத்திலும், மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள் பெருந்தேவி தாயாருடன் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளினர்.கடலுார் அரிசி பெரியாங்குப்பம் சுயம்பு சக்கரத்தாழ்வார் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை கருட சேவையில் பெருமாள் அருள்பாலித்தார்.

பண்ருட்டிபண்ருட்டி அடுத்த திருவதிகை ரங்கநாதபெருமாள் கோவிலில் காலை 6:00மணிக்கு விஸ்வரூப தரிசனம், 8:00 மணிக்கு நித்யபடி பூஜை, காலை 10:00 மணிக்கு மூலவர் பெருமாள், உற்சவர் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.மாலை 6:00 மணிக்கு மூலவர் பெருமாள் பூவாலங்கி சேவையில், உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி,பூமிதேவி சகிதமாக வேணுகோபால் அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.நெல்லிக்குப்பம்நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமிகோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம்நடந்தது.மூலவர் வேணுகோபால சுவாமி திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்திலும், பாமா ருக்குமணி சமேதராய்

வேணுகோபால சுவாமி உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார்.பரங்கிப்பேட்டைபரங்கிப்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. மூலவர் திருப்பதி சீனிவாச பெருமாள், அலங்காரத்திலும், உற்சவமூர்த்தி, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரங்களில் அருள்பாலிக்கிறார். பூஜைகளை, சீனிவாச பட்டாச்சாரியார் செய்திருந்தார்.விருத்தாசலம்விருத்தாசலம் பெரியார் நகர் தெற்கு, ராஜகோபால சுவாமி கோவிலில் அதிகாலை சுப்ரபாத சேவை,

சிறப்பு திருமஞ்சனம்நடந்தது.திருவேங்கடமுடையான் அலங்காரத்தில் சமேத கோலத்தில் பெருமாள் அருள்பாலித்தார். சாத்துக்கூடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.விருத்தாசலம் கம்பர் தெரு ராதாகிருஷ்ண சுவாமி கோவிலில், தும்பிக்கை ஆழ்வார், கம்பத்து ஆழ்வார், ஆஞ்சநேயர், கருடாழ்வார், ஆண்டாள் நாச்சியார் சுவாமிகளுக்கு காலை 8:00 மணியளவில் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. வடைமாலை சாற்றப்பட்டு ஆஞ்சநேயர் சுவாமி அருள்பாலித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X