இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : அக் 03, 2021 | Added : அக் 03, 2021
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்போலீஸ்காரர் வீடு உட்பட 2 வீடுகளில் நகை திருட்டுதியாகதுருகம் பாரதி நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 30; ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணி புரிந்து வருகிறார். இவர், நேற்று வேலைக்கு சென்றதும் அவரது மனைவி ராஜபிரியா இரவு 8:00 மணிக்கு கதவை பூட்டி விட்டு அருகில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு துாங்கச் சென்றுவிட்டார்.காலையில் வந்துதமிழக நிகழ்வுகள்
போலீஸ்காரர் வீடு உட்பட 2 வீடுகளில் நகை திருட்டுதியாகதுருகம் பாரதி நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 30; ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணி புரிந்து வருகிறார். இவர், நேற்று வேலைக்கு சென்றதும் அவரது மனைவி ராஜபிரியா இரவு 8:00 மணிக்கு கதவை பூட்டி விட்டு அருகில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு துாங்கச் சென்றுவிட்டார்.காலையில் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த மூன்றரை சவரன் நகை, வெள்ளிக் கொலுசுகள், 10 ஆயிரம் ரூபாய் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதேபோன்று, புக்குளம் ரோட்டில் உள்ள குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் தங்கமணி மனைவி கலையரசி, 43; இவர், நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் தனது வீட்டை பூட்டிவிட்டு கோட்டை மேட்டில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்றிருந்தார்.காலை வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஒன்னே முக்கால் சவரன் நகை திருடு போயிருப்பது தெரியவந்தது.புகார்களின் பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.latest tamil news25 பவுன் நகை கொள்ளைபோடி கிருஷ்ணா நகரில் வசிப்பவர் ஹேமா 29. இவரது கணவர் சுந்தர்பிரசாத் வேலைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்நிலையில் ஹேமா தேனி கொடுவிலார்பட்டியில் மாமியார் இறப்பு நிகழ்வுக்கு சென்று விட்டு நேற்று போடி திரும்பினார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்ததில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 25.5 பவுன் தங்க நகை, ரூ. 30 ஆயிரம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மதம் குறித்து அவதுாறு பரப்பியவருக்கு 'குண்டாஸ்'


சென்னை : முஸ்லிம் மதம் குறித்து அவதுாறு பரப்பியவரை, குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

சென்னை, புத்தகரத்தில் 'யோகக்குடில்' என்ற பெயரில், சிவகுமார் என்பவர் ஆசிரமம் நடத்தி வருகிறார். அவருடைய, 'யுடியூப்' சேனலில் முஸ்லிம் மதத்தை பற்றி அவதுாறாக பேசினார். ஏற்கனவே, ஹிந்து மதம் குறித்து, அவதுாறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.


இன்ஸ்டா'வில் சிறுமிக்கு தொல்லைமணலி :'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் சிறுமி பெயரில் போலி கணக்கு துவங்கி, புகைப்படங்கள் பதிவேற்றிய இளைஞர் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை, மணலி, அய்யா கோவில் தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வன், 19; கூலித்தொழிலாளி. இவர், சமூக வலைதளமான 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில், போலி கணக்கு துவங்கி, கொருக்குப்பேட்டை, பெருமாள் கோவில் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் புகைப்படத்தை பதிவிட்டு தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து, தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கலைச்செல்வனை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.


latest tamil newsதீக்கிரையான தாசில்தார் அலுவலகம்கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலக தரை தளத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவில், மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.
மின் ஒயர்களில் மளமளவென தீ பரவியதால் கட்டுக்கு அடங்காமல் போனது. கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.தீ விபத்தில், முக்கிய ஆவணங்கள், ஆறு கணினி, ஐந்து பிரின்டர்கள், ஜெராக்ஸ் இயந்திரம், மேஜை, நாற்காலிகள், ஜன்னல்கள் எரிந்து நாசமாகின.தாசில்தார் அலுவலகம் முழுதும் கரும்புகை சூழ்ந்து கொண்டதால், எஞ்சிய ஆவணங்களை மீட்கும் பணி தாமதமானது. தீ விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.


இந்திய நிகழ்வுகள்
ராஜஸ்தான் கொள்ளையர்கள் நான்கு பேர் கைதுபெங்களூரு: கர்நாடகாவில், கொள்ளையடித்து வந்த, ராஜஸ்தானின் நால்வரை, பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.

ராஜஸ்தானில், 'பிச்சு கேங்' பெயரில் செயல்பட்டு வந்த கொள்ளை கும்பல், கர்நாடகாவின் பெங்களூரில் தொழிலதிபர்கள், வியாபாரிகள், ஷோரூம்களை குறி வைத்து, இரவு நேரத்தில் கொள்ளையடித்து வந்தனர். ஆகஸ்ட் 22ல், இரவு கே.ஆர்.மார்க்கெட் அருகிலுள்ள 'டெக்ஸ் டைல்ஸ் சேல்ஸ் ஷோ ரூமில்' நுழைந்து, கல்லாப்பெட்டியில் இருந்த 25.45 லட்சம் ரூபாய் திருடி சென்றனர். சுவற்றில் '007 பிர் ஆயேங்கே' என எழுதி விட்டு தப்பியோடினர். இது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. விசாரணை நடத்திய கே.ஆர்.மார்க்கெட் போலீசார், இது 'பிச்சு கேங்' கைவரிசை என்பதை கண்டுப்பிடித்தனர். அதன்பின் போலீஸ் படையினர், ராஜஸ்தான் சென்று, 15 நாள் அங்கு தங்கி, அந்த கேங்கின் சுனில், பவானிசிங், ஆஷுராம், கிஷோர் சிங் ஆகியோரை கைது செய்து பெங்களூரு அழைத்து வந்தனர்


காருடன் எரிந்து கிடந்த நபரின் அடையாளம் கண்டு பிடிப்புபெங்களூரு: தீர்த்தஹள்ளி மிட்லுகோடு அருகில் வனப்பகுதியில் காருடன் எரிந்து கிடந்த நபரின் அடையாளம் தெரிந்தது. இவரை கொலை செய்த, மனைவி உட்பட ஐவர் கைது செய்யப்பட்டனர்.

ஷிவமொகா தீர்த்தஹள்ளி மிட்லுகோடு அருகிலுள்ள வனப்பகுதியில் சில நாட்களுக்கு முன் கார் எரிந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதற்குள் நபரின் எலும்புக்கூடு இருந்தது. தகவலறிந்து அங்கு வந்த தீர்த்தஹள்ளி போலீசார் விசாரணை நடத்திய போது, காரிலிருந்த நபர் வினோத், 45, என்பது தெரிந்தது.சாகராவின் ஆசாபுராவில் வசித்த வினோத், 45, ஹெர்பல் லைப்' என்ற பெயரில் தொழில் நடத்தினார். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.இவருக்கு ஹொசநகரின், பட்டேமல்லப்பா கிராமத்தின் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது.சம்பாதித்த பணத்தை அவருக்கே செலவழித்தார். அதுமட்டுமின்றி நிலம் விற்று வந்த லட்சக்கணக்கான ரூபாயையும் அவருக்கே கொடுக்க முற்பட்டார்.இதனால் கொதிப்படைந்த மனைவி, மகன்கள் அவரை கொலை செய்ய திட்டமிட்டனர்.

செப்டம்பர் 26ல், வீட்டில் அவர் கழுத்தை, இரும்பு கம்பியால் நெரித்து, இரும்புத்தடியால் தலையில் அடித்து கொலை செய்தனர்.அதன்பின் தங்களின் மொபைலை 'சுவிட்ச் ஆப்' செய்து, வீட்டில் வைத்து விட்டு, வினோத் உடலை அவரது காரிலேயே வைத்து, தீர்த்தஹள்ளி வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். காரை பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல், கொலை நடந்த இடத்தை பினாயில் ஊற்றி கழுவி சுத்தப்படுத்தினர். தாங்கள் அணிந்த உடைகளையும் எரித்தது, விசாரணையில் தெரிந்தது. வினோத் மனைவி, இரண்டு மகன்கள், அவரது அக்காவின் மகனை, போலீசார் கைது செய்தனர்.


குடும்ப பிரச்னை: ஒரே குடும்பத்தில் மூன்று பேர் தற்கொலைநெலமங்களா:மாதநாயகனஹள்ளியில், குடும்ப பிரச்னையால், தாய் உட்பட ஒரே குடும்பத்தின் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

பெங்களூரு நெலமங்களா மாதநாயகனஹள்ளியில் வசித்த பிரசன்னகுமார், 45, பீன்யா பி.எம்.டி.சி., டிப்போவில் ஓட்டுனர், நடத்துனராக பணியாற்றினார். இவரது மனைவி வசந்தா, 40. இத்தம்பதியருக்கு, யஷ்வந்த், 15, என்ற மகனும், நிஷ்விதா, 6, என்ற மகளும் உள்ளனர். பிரசன்னகுமார் பலரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி வீடு கட்டியிருந்தார்.

இவர் கடந்தாண்டு, கொரோனாவுக்கு பலியானார்.கணவர் இறந்த பின், மன அழுத்தத்துக்கு ஆளான வசந்தா, வீட்டை விற்று கடனை அடைக்க முடிவு செய்தார். ஒரு முறை மகள், மகனுடன் ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். அப்பகுதியினர் அவரை தடுத்து புத்திமதி கூறினர்.தன் அக்கா தைரியமாக இருக்க வேண்டும் என, வசந்தாவின் தம்பி நந்தீஷ், தன் தாய் தாயம்மாவை அக்கா வீட்டில் விட்டிருந்தார்.நேற்று முன் தினம் மதியம், தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை நந்தீஷ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தார். பலமுறை மொபைலில் அக்காவை தொடர்பு கொண்டும் அவர் எடுக்கவில்லை.

இதனால் பீதியடைந்த தம்பி, இரவு 9:30 மணியளவில் அக்காவின் வீட்டுக்கு வந்த போது, கதவு உட்புறமாக தாழிடப்பட்டிருந்தது. கதவை தட்டியும் திறக்கவில்லை.அக்கம், பக்கத்தினர் உதவியுடன் ஏணி வைத்து மாடியில் ஏறி உள்ளே சென்று பார்த்த போது, தாயும், மகனும், மகளும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.மாதநாயகனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


உலக நிகழ்வுகள்
ருமேனியா நாட்டு மருத்துவமனையில் தீ விபத்து; 7 பேர் பலிஐரோப்பிய நாடான ருமேனியாவின் தென்கிழக்கே அமைந்துள்ள கான்ஸ்டெண்டா நகர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் உள்பட 113 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அந்த மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் சிக்கிக்கொண்டனர். அவர்களில் பலர் மருத்துவமனை ஜன்னல் வழியாக வெளியே குதித்து உயிர் தப்பினர். இந்த தீவிபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மருத்துவமனைக்குள் சிக்கிய பலரையும் தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். இருந்தபோதும், இந்த தீ விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X