பொது செய்தி

தமிழ்நாடு

காதிகிராப்ட்டில் கோலாகலம்; காந்தி மியூசியம் அலங்கோலம்!தேசத்தந்தை பிறந்தநாளில் வேதனையான முரண்பாடு

Updated : அக் 03, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
தேச விடுதலைப் போராட்டத்தில் கொங்கு மண்ணுக்கென்று பெரும் பங்குண்டு. சிதம்பரனார் செக்கிழுத்ததும், தேசிய கீதமாக அறிவிக்கப்படும் முன்னே ஜனகனமன முதல்முறை தாகூரால் பாடப்பட்டதும் இங்கேதான்.என்.ஜி.ராமசாமி, சி.சுப்ரமணியம், கதர் அய்யாமுத்து, கோவை சுப்ரி, சி.வி.சுப்பையா, அப்துல் ரஹீம், ஜி.கே.சுந்தரம், ஆர்.கே.சண்முகம் செட்டியார், அவிநாசிலிங்கம் செட்டியார், வெள்ளிங்கிரி

தேச விடுதலைப் போராட்டத்தில் கொங்கு மண்ணுக்கென்று பெரும் பங்குண்டு. சிதம்பரனார் செக்கிழுத்ததும், தேசிய கீதமாக அறிவிக்கப்படும் முன்னே ஜனகனமன முதல்முறை தாகூரால் பாடப்பட்டதும் இங்கேதான்.



latest tamil news


என்.ஜி.ராமசாமி, சி.சுப்ரமணியம், கதர் அய்யாமுத்து, கோவை சுப்ரி, சி.வி.சுப்பையா, அப்துல் ரஹீம், ஜி.கே.சுந்தரம், ஆர்.கே.சண்முகம் செட்டியார், அவிநாசிலிங்கம் செட்டியார், வெள்ளிங்கிரி கவுண்டர்...என இந்த மண்ணிலிருந்து தேச விடுதலைக்காக தீவிரமாகப் போராடியவர்களின் பட்டியல் வெகுநீளம். தேசத்தந்தை இரண்டு முறை பாதம் பதித்த பாக்கியமும் இந்த கோவை மண்ணுக்கு உண்டு. ஆனால், இதே கோவை நகரில், காந்தியின் அருமை பெருமைகளைச் சொல்லும் அருங்காட்சியகம் அலங்கோலமாக இருப்பது, காந்தியத்தை ஆத்மார்த்தமாக நேசிக்கும் பலரையும் பெரும் வேதனை கொள்ள வைத்திருக்கிறது.


latest tamil news


கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்துக்கு அருகில், குதிரை வண்டி கோர்ட்டுக்குப் போகும் வழியில் இருக்கிறது காந்தி அருங்காட்சியகம். 1969ம் ஆண்டில், தேசமெங்கும் காந்தி நுாற்றாண்டு கொண்டாடப்பட்ட போது, அதன் நினைவாக இங்கு அமைக்கப்பட்ட இந்த காந்தி கூடம், 1973ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அன்றைய அமைச்சர் மன்னை நாராயணசாமியால் திறந்து வைக்கப்பட்டது. காந்தியின் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்த நிகழ்வுகளின் புகைப்படங்கள், இங்கு வைக்கப்பட்டுள்ளன. காந்தியின் சிலை, அவரைப் பற்றிய குறிப்புகளும் இங்குள்ளன.


latest tamil news


சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி போன்ற நாட்களில், பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் அழைத்து வருவது வழக்கமாக இருந்தது. அரிதாக பொதுமக்களும் வருவார்கள்.சமீபத்திய ஆண்டுகளாக, இங்கு மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் என பார்வையாளர்கள் யாருமே வருவதில்லை. மியூசியத்தின் பராமரிப்பும் கேள்விக்குறியாகிவிட்டது. பெரும்பாலான புகைப்படங்கள் பழுப்பேறி, அழுக்காகக் காட்சியளிக்கின்றன. சில புகைப்படங்கள் அழிந்து, கிழிந்து, அரித்து அழியும் நிலையில் உள்ளன. தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தில், இந்த புகைப்படங்களை அழகாகப் புதுப்பிக்கலாம். எக்காலத்திலும் பாதிப்புக்கும் உள்ளாகாத பிரேம் போடலாம். ஆனால், அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. காந்தி கூடம் என்ற பெயர்ப்பலகையே அழிந்து எழுத்துக்களே தெரியாத அளவில் உள்ளது.


latest tamil news


இந்நிலையில், காந்தி அருங்காட்சியகத்துக்கு அருகிலுள்ள கதர் அங்காடியில் (காதிகிராப்ட்), காந்தியின் 153வது பிறந்தநாள் விழாவும், கதர் சிறப்பு விற்பனை துவக்கவிழாவும் நடந்தது. கோவை கலெக்டர் சமீரன் கலந்து கொண்டார். அப்போது இந்த காந்தி கூடத்துக்கும் வந்து பார்வையிட்டார். அங்குள்ள காந்தி சிலைக்கும் மாலை அணிவித்தார். ஆனால் பழுப்பேறிய, அரித்து, அழிந்து கொண்டிருக்கும் புகைப்படங்களை அவர் கவனிக்கவே இல்லை.

இதேநிலையில், இந்த புகைப்படங்களை வைத்திருந்தால், இன்னும் சில ஆண்டுகளில் அனைத்துப் படங்களும் அழிந்து, கூடத்துக்கே மூடுவிழா நடத்த வேண்டியிருக்கலாம். தேசத்தந்தையின் புகைப்படங்களை இப்படி வைத்திருப்பது, தேசத்தை நேசிக்கும் மக்களைக் கொண்ட கோவை மண்ணுக்குதான் அவமானம்!

-நமது நிருபர்-

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
03-அக்-202121:30:44 IST Report Abuse
அம்பி ஐயர் இதை விட எவ்வளாவோ முக்கியமான வேலைகள் உள்ளன அரசாங்கத்திற்கும்.... அமைச்சர்களுக்கும்.... சைக்கிளிங் ஓட்ட வேண்டும்... விமான நிலையம் சென்று வழியனுப்ப வேண்டும்..... வளைகாப்பு... பூப்புனித நீராட்டு விழா... இப்படிப் பல்வேறு வேலைகள் உள்ளன..... அதற்குச் சென்று வரவே நேரம் போதவில்லை.... இதுல வேற காந்தியாம்... மியூசியமாம்.... போங்கப்பா.... போய் வேற வேலையப் பாருங்க....
Rate this:
Cancel
Krishnan - Coimbatore ,இந்தியா
03-அக்-202119:14:09 IST Report Abuse
Krishnan மகாத்மா காந்தியை மறந்து விட்டார்கள் இந்த படுபாவிகள்.. இதற்கு நாடு பிரிட்டிஷ் காரன் கையில் இருந்திருக்கலாம். எல்லா கடைகளும் திறந்திருக்கிறது. குடி மகன்கள் குடித்து விட்டு ரோட்டில் கிடக்கிறார்கள். எங்கிருந்து பாட்டில் கிடைத்தது என்று தெரியவில்லை.
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
03-அக்-202120:18:47 IST Report Abuse
Kasimani Baskaran"எங்கிருந்து பாட்டில் கிடைத்தது என்று தெரியவில்லை" - நீங்கள் குவாட்டர் பாட்டிலுக்கு ஓட்டை விற்றதால் வந்த பயன்தான் பாட்டில்... திருந்திவிட்டால் அடுத்த முறை திராவிட மதத்தினரை ஆதரிக்காதீர்கள்....
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
03-அக்-202116:45:31 IST Report Abuse
sankaseshan சாவர்க்கர் அந்தமான் சிறையில் துன்பங்கள் தெரியுமா ? உடல்நிலை காரணமாக கடிதம் கொடுத்து வெளியில் வந்தார் காந்தி நேரு வகையறாக்கள் வெள்ளைக்கார னுக்கு ஆதரவாக இருந்து சிறையில் சொகுசாக இருந்தார்கள் சரித்திரத்தை நன்றாக படி யப்பா காங்கிரஸ்கரன் பொய் யாய் எழுதியதை படித்தால் உண்மை புரியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X