பொது செய்தி

தமிழ்நாடு

ரோடுகளில் கோடு போட ஆண்டுக்கு ஆயிரம் கோடி: புகுந்து விளையாடிய புதுக்கோட்டை கோஷ்டி

Added : அக் 03, 2021 | கருத்துகள் (67)
Share
Advertisement
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, ரோடுகளில் கோடு போடும் கான்ட்ராக்ட்டில் மட்டும், ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக புகார் கிளம்பியுள்ளது.அரசு ஊழியர்களாக இருந்து கொண்டு, அரசுப் பணிகளை எடுத்து கோடிகளில் சம்பாதித்துள்ள புதுக்கோட்டை சகோதாரர்கள் ரவிச்சந்திரன், முருகானந்தம், பழனிவேல் ஆகியோர் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி ஏராளமான
ரோடு, கோடு, ஆயிரம் கோடி, புதுக்கோட்டை கோஷ்டி

கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, ரோடுகளில் கோடு போடும் கான்ட்ராக்ட்டில் மட்டும், ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக புகார் கிளம்பியுள்ளது.

அரசு ஊழியர்களாக இருந்து கொண்டு, அரசுப் பணிகளை எடுத்து கோடிகளில் சம்பாதித்துள்ள புதுக்கோட்டை சகோதாரர்கள் ரவிச்சந்திரன், முருகானந்தம், பழனிவேல் ஆகியோர் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி ஏராளமான சொத்து ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளது. முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு இவர்கள் பினாமிகளாக இருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இவர்களைப் போலவே, 'மாஜி' துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,க்கு நெருக்கமான புதுக்கோட்டை செல்வம் என்பவருக்கு, கடந்த பத்தாண்டுகளாக நீர் நிலைகளைத் துார் வாரும் ஒப்பந்தப்பணிகள் தரப்பட்டுள்ளன. அதை வைத்து பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மண்ணை விற்றிருப்பதாக, லஞ்ச ஒழிப்புத்துறைக்குத் தகவல் கிடைத்து அதுபற்றியும் விசாரணை துவங்கியுள்ளது.

முன்னாள் முதல்வர் பழனிசாமி வசமிருந்த நெடுஞ்சாலைத்துறை சார்பில், புதுக்கோட்டையைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின், 'ஹரி வே லைன்' என்ற நிறுவனத்துக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப்பணி தரப்பட்டதும் தெரியவந்துள்ளது.


ஒளிராத கோடு


ரோடுகளில் கோடு போடுவதில் மட்டுமே ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊழல் நடந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அகலமான இரு வழிச்சாலைகளில், 'சென்டர் மார்க்கிங்' போட்டு, அதன் நடுவில் 'ஸ்டட்ஸ்' எனப்படும் ஒளிரும் விளக்குகள் பொருத்த வேண்டுமென்ற சாலைக்குழும விதிகளைப் பயன்படுத்தியே இந்த ஊழல் அரங்கேற்றப்பட்டுள்ளது.


latest tamil news


இரவு நேரங்களில் ரோட்டின் நடுப்பகுதி தெரியும் வகையில் வெள்ளை நிற ஒளிரும் பெயின்ட் அடிக்க ஒரு லிட்டருக்கு, 2,000 ரூபாய் வரை செலவிட வேண்டியிருக்கும். ஆனால் புதுக்கோட்டை நிறுவனத்தால் லிட்டர் 100 ரூபாய் பெறுமானமுள்ள பெயின்ட்களே பயன்படுத்தப்பட்டுள்ளன; எளிதில் உடையாத தரமான 'ஸ்டட்ஸ்' ஒன்றின் விலை 2,000 ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த நிறுவனம் போட்டுள்ள 'ஸ்டட்ஸ்'கள், வெறும் 250 ரூபாய் பெறுமான சாதாரண பிளாஸ்டிக் தயாரிப்பாக உள்ளன.

நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படும் ரோடுகளில், ஏழு மீட்டர் அகலத்திலுள்ள ரோடுகளில்தான், தலா இரு புறமும் மூன்றரை மீட்டர் விட்டு நடுவில் 'சென்டர் மார்க்கிங்' கோடுகளைப் போட வேண்டும். ஆனால், வெறும் நான்கு மீட்டர் அகலத்திலுள்ள ரோடுகளிலும் 'சென்டர் மார்க்கிங்' கோடுகள் மற்றும் இரு புறமும் எல்லைக்கோடுகள் அமைப்பதற்கு கான்ட்ராக்ட் தரப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை ரோடுகளில் மட்டுமின்றி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ரோடுகளிலும் இந்த கோடுகள் இஷ்டத்துக்குப் போடப்பட்டுள்ளன.இதனால் நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் வீதிகளுக்குள் உள்ள 30 அடி, 40 அடி ரோடுகளிலும் சென்டர் மார்க்கிங், இரு புறமும் எல்லைக்கோடுகள் போட்டு, அரசுப்பணம் கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தரக்கட்டுப்பாடு பிரிவு இவற்றைப் பெயரளவுக்குக் கூட பரிசோதித்ததில்லை. எல்லாத்துறைகளிலும் சேர்த்து, ஒவ்வொரு ஆண்டும் ரோடுகளுக்கு கோடு போடுவதற்கே 2,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் தரப்பட்டுள்ளன. உண்மையில், இந்தத் தொகையில் 40 சதவீதத்தொகைக்குக் கூட, அந்தப் பணி தரமுடையதாக செய்யப்படவில்லை.


மீண்டும் முகாம்


சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு முன் கூட்டியே 10 சதவீதத்தொகை கமிஷனாகத் தரப்பட்டுள்ளது. எல்லோருக்கும் கொடுத்ததும் செலவும் போக, ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு கோடு போடுவதில் மட்டுமே புதுக்கோட்டை நிறுவனம் சம்பாதித்திருப்பதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இவர்களிடம் தகவல்களைத் திரட்டி, நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கில் இதையும் ஒரு தரவாகக் கொண்டு வருவதற்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதே புதுக்கோட்டை கோஷ்டி, இப்போது மீண்டும் கோடு போடுவதில் கோடிகள் அடிக்க, தற்போதுள்ள அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரியகருப்பன் அலுவலகங்களில் முகாமிட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

-நமது சிறப்பு நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
08-அக்-202100:33:40 IST Report Abuse
Aarkay இப்போதுள்ளவர்கள் மட்டும் என்ன பத்தரைமாற்று தங்கங்களா? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். குற்றப்பின்னணி உள்ளவர்களுக்கு தேர்தல் டிக்கெட், கோடிகளில் தேர்தல் செலவு, இவற்றையெல்லாம் தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளாதவரை, ஊழல் நடந்துகொண்டுதான் இருக்கும். தேர்தல் சீர்த்திருத்தம்தான் ஒரே வழி. படிப்பறிவற்ற கேடி பில்லாக்களும், கில்லாடி ரங்காக்களும் MLA, அமைச்சர்களானால், மாறி, மாறி ஊழல் செய்துகொண்டுதான் இருப்பார்கள்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
04-அக்-202118:53:52 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, ரோடுகளில் கோடு போடும் கான்ட்ராக்ட்டில் மட்டும், ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் //
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
03-அக்-202123:12:04 IST Report Abuse
jagan ஊழலில் LKG லெவல் இருக்கும் ஆ தீமுகவே இந்த நிலை என்றால், விஞான ஊழல், ஊழல் டபுள் Phd செய்துள்ள தீ மு க எவ்ளோ அடிக்குமோ ?
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
05-அக்-202103:26:00 IST Report Abuse
Amal Anandanஅதானே அதிமுகவை குறை சொல்லவேக்கூடாது....
Rate this:
Venkatakrishnan - Mumbai,இந்தியா
07-அக்-202122:04:03 IST Report Abuse
Venkatakrishnanநீயெல்லாம் படிச்சவன்தானே? வெளில சொல்லாத... சங்கீ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X