பொது செய்தி

தமிழ்நாடு

காந்தி சிலைக்கு கட்சியினர் மரியாதை

Added : அக் 03, 2021
Share
Advertisement
ஈரோடு: காந்தி ஜெயந்தியை ஒட்டி, ஈரோடு யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநகர மாவட்ட காங்., சார்பில், காந்தி ஜெயந்தி, முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு நாள், முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாளையொட்டி, கட்சி அலுவலகத்தில் அவர்களது உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை

ஈரோடு: காந்தி ஜெயந்தியை ஒட்டி, ஈரோடு யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநகர மாவட்ட காங்., சார்பில், காந்தி ஜெயந்தி, முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு நாள், முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாளையொட்டி, கட்சி அலுவலகத்தில் அவர்களது உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

* ஈரோடு தெற்கு மாவட்ட காங்., சார்பில், காந்தி, காமராஜர் உருவப்படங்களுக்கு மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமையில் மாலை அணிவித்தனர்.


* ஈரோடு த.மா.கா., சார்பில் மாநகராட்சியில் உள்ள காந்தி சிலைக்கும், அரசு மருத்துவமனை ரவுண்டானா காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்தனர்.


* காந்திய அறக்கட்டளை, காந்தி மன்றம் மற்றும் நம்பியூர் சர்வோதய சங்கம் சார்பில், காந்தி ஜெயந்தி விழா கோபியில் கொண்டாடினர். தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். நகராட்சி அலுவலகம் அருகே காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காந்தியின் கொள்கை, வரலாறு, சத்தியம், அகிம்சை, சமய சமரசம், அஞ்சாமை குறித்து விளக்கமாக பேசினர். மாவட்டத்தில், காந்தி ஜெயந்தி விழா பல்வேறு அமைப்பினர், கட்சியினர் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X