பொது செய்தி

தமிழ்நாடு

மாநகரில் அவ்வப்போது பெய்த மழையால் அவதி; இடியால் 10 முறைக்கு மேல் மின்சாரம் 'கட்'

Added : அக் 03, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நேற்று மதியம், 2:30 மணிக்கு மேல் பலத்த மின்னல், இடியுடன் மழை பெய்தது. காற்றும் பலமாக வீசியதால், சாலைகளில் வாகன நடமாட்டம் அடியோடு குறைந்தது. ஒரு மணி நேரம் தொடர்ந்த மழை, 3.45 மணிக்கு மேல் குறைந்தது. பின் லேசான தூறலுடன், மின்னல், இடியுடன் இரவு வரை தொடர்ந்தது. வழக்கம்போல் மாநகரில் பன்னீர்செல்வம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நேற்று மதியம், 2:30 மணிக்கு மேல் பலத்த மின்னல், இடியுடன் மழை பெய்தது. காற்றும் பலமாக வீசியதால், சாலைகளில் வாகன நடமாட்டம் அடியோடு குறைந்தது. ஒரு மணி நேரம் தொடர்ந்த மழை, 3.45 மணிக்கு மேல் குறைந்தது. பின் லேசான தூறலுடன், மின்னல், இடியுடன் இரவு வரை தொடர்ந்தது. வழக்கம்போல் மாநகரில் பன்னீர்செல்வம் பூங்கா பகுதி சாலைகள், மணிக்கூண்டு சாலைகள், ஈஸ்வரன் கோவில் பகுதி, ஆர்.கே.வி., சாலை, கருங்கல்பாளையம், பழையபாளையம் போன்ற பகுதிகளில் அதிக தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மின்னல், இடியின் தாக்கம் அதிகமாக இருந்ததால், 10க்கும் மேற்பட்ட முறை மின் தடை ஏற்பட்டு, சிறிது நேரத்தில் மீண்டும் மின்சாரம் வந்தது.

கோபி, சிறுவலூரில்...: கோபி அருகே சிறுவலூரில், நேற்றிரவு, 7:30 மணிக்கு, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சிறுவலூர், கரிச்சிபாளையம், மீன்கிணறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சிறுவலூர் பகுதி முழுக்க மின்தடை ஏற்பட்டது. இதேபோல் நம்பியூர், குருமந்தூர், அளுக்குளி பகுதிகளிலும் மழை பெய்தது. தவிர கவுந்தப்பாடி டவுன் பகுதி, ஆப்பக்கூடல் மற்றும் பவானி சாலைகளில் மழை பெய்தது. கோபி நகரில் இரவு, 8:00 மணிக்கு பலத்த மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட மின்தடையால் மக்கள் அவதியுற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X