பொது செய்தி

தமிழ்நாடு

புரட்டாசி 3வது சனியிலும் ஏமாற்றம்: கோவில் வாசலில் நடந்த வழிபாடு

Added : அக் 03, 2021
Share
Advertisement
ஈரோடு: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையில், கோவிலில் வாசலில் வழிபட்டு, பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு பிரசித்தம். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், கோவில்களை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையான நேற்றும், ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர்

ஈரோடு: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையில், கோவிலில் வாசலில் வழிபட்டு, பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு பிரசித்தம். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், கோவில்களை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையான நேற்றும், ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் பெருமாள் கோவிலுக்கு வந்த பக்தர்கள், ராஜகோபுர கதவுக்கு மாலை அணிவித்து, வாசலில் நின்று வழிபட்டு சென்றனர். படிக்கட்டுகளில் சூடம் ஏற்றி வழிபட்ட பக்தர்கள், வாங்கி வந்த மலர் மாலை மற்றும் துளசி மாலையை, கதவுகளில் மாட்டி சென்றனர். சுவாமி தரிசனம் கிடைக்காததால், ஏமாற்றம் அடைந்ததாக, பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.


* அந்தியூர் பேட்டை பெருமாள் கோவிலில், மூலவருக்கு திருப்பதி ஏழுமலையான் வெங்கடாசலபதி அலங்காரம் செய்யப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும், பக்தர்கள் திரளாக சென்று, வாசல் மற்றும் கோபுரம் முன் நின்று வழிபட்டு திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X