பொது செய்தி

தமிழ்நாடு

வெட்டாத வாய்க்காலுக்கு வரி: கிராம சபையில் விவசாயி புகார்

Added : அக் 03, 2021
Share
Advertisement
கெங்கவல்லி: ஜங்கமசமுத்திரம் கிராம சபை கூட்டத்தில், கடந்த, 1971ல் வெட்டிய வாய்க்காலை காணவில்லை என, விவசாயி புகார் மனு அளித்தார்.கெங்கவல்லி, ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில் நேற்று, கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். அதில், செங்காடு விவசாயி பெரியசாமி புகார் மனு அளித்தார். அதில், 'ராசிபுரம் அருகே, பெரப்பன்சோலை அணைக்கட்டு பகுதியில் இருந்து, 54

கெங்கவல்லி: ஜங்கமசமுத்திரம் கிராம சபை கூட்டத்தில், கடந்த, 1971ல் வெட்டிய வாய்க்காலை காணவில்லை என, விவசாயி புகார் மனு அளித்தார்.


கெங்கவல்லி, ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில் நேற்று, கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். அதில், செங்காடு விவசாயி பெரியசாமி புகார் மனு அளித்தார். அதில், 'ராசிபுரம் அருகே, பெரப்பன்சோலை அணைக்கட்டு பகுதியில் இருந்து, 54 ஏக்கர் விளை நிலம் பாசனம் பெற, 1971 - 72ல் வாய்க்கால் வெட்ட தீர்மானிக்கப்பட்டது. 1984ல், நீர் பாசன மேம்பாட்டு வரி அணைத்தும் அரசாணையிட்டு வருவாய்த்துறை மூலம் வசூல் செய்து வருகின்றனர். அதற்கான ரசீதும் உள்ளது. இதுவரை வாய்க்கால் வெட்டப்படவில்லை. செங்காட்டில் வெட்டாத வாய்க்காலுக்கு, வரிகளை விவசாயிகள் செலுத்துகிறோம். வாய்க்கால் வெட்டி பாசன வசதி செய்துதர வேண்டும்' என தெரிவித்திருந்தார். தும்பலில் நடந்த கிராம சபா கூட்டத்தில், சோலார் மின் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. தலைவாசலில் நடந்த கிராம சபை கூட்டத்தில், பொது நிதி செலவினம், மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தல், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் தடை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

வார்டு உறுப்பினர்கள் சாலைமறியல்: கெங்கவல்லி, ஆணையாம்பட்டி ஊராட்சியில், தலைவர் சாந்தி தலைமையில் வார்டு உறுப்பினர்கள் சுதா, முத்தரசு, பேரறிவாளன், துணை பி.டி.ஓ., சரவணன் ஆகியோருடன், கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. ஆனால், முன்கூட்டியே கூட்டம் நடத்தியது குறித்து, துணைத்தலைவர் சுந்தரி தலைமையில் ஐந்து வார்டு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, சரவணன் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறி, சுந்தரி உள்ளிட்டோர், சாலை மறியலில் ஈடுபட்டனர். கெங்கவல்லி போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது, 'மக்களுக்கு இடையூறாக, மக்கள் பிரதிநிதிகள் மறியல் நடத்த வேண்டாம். ஊரக வளர்ச்சி அதிகாரியிடம் புகார் அளியுங்கள்' என்றனர். பின், அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X