பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு அலுவலர்கள் மீது நடவடிக்கை: முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்

Added : அக் 03, 2021
Share
Advertisement
மேட்டூர்: ''நகை அடகு வைத்ததில் தவறு நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்க அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்,'' என, அ.தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் அமைச்சர் செம்மலை கூறினார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தி.மு.க., அரசு சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது. தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு சங்கங்களில், 5 பவுன் வரை அடமானம் வைத்த அனைவரது நகை கடன்களும் ரத்து

மேட்டூர்: ''நகை அடகு வைத்ததில் தவறு நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்க அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்,'' என, அ.தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் அமைச்சர் செம்மலை கூறினார்.


இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தி.மு.க., அரசு சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது. தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு சங்கங்களில், 5 பவுன் வரை அடமானம் வைத்த அனைவரது நகை கடன்களும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அச்சலுகைகளை பெற நிபந்தனை விதிப்பது எந்த வகையில் நியாயம்? கொரோனா காலத்தில் பலர் அவசர, அவசியத்துக்கு நகைகளை அடகு வைத்து கடன் வாங்கினர். தகுதியான, 80 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகையில், 6,000 கோடி ரூபாய் மட்டும் தள்ளுபடி என கணக்கிடப்பட்டுள்ளதாக கூறுவது, மக்களை ஏமாற்றும் செயல். தகுதியற்றவர் என அரசால் கண்டறியப்பட்டவர், 11.5 சதவீத வட்டி செலுத்தி நகைகளை மீட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வாக்குறுதியை நம்பியவர்களுக்கு இது கூடுதல் தண்டனை. அத்துடன், அவர்கள் மோசடிக்காரர், முறைகேடு செய்தவர் என்ற பட்டம் தான், தி.மு.க., அரசு அவர்களுக்கு கொடுக்கும் விருது. கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்திருந்தால், அதற்கு காரணமாக இருந்த துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பதிலாக கடன் பெற்றவர்களை கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X