தடுப்பூசி போடலையா? இன்று சிறப்பு முகாமுக்கு வாங்க| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி போடலையா? இன்று சிறப்பு முகாமுக்கு வாங்க

Added : அக் 03, 2021
Share
சேலம்: இன்னும் தடுப்பூசி போடாதவர்களுக்கு இன்று சிறப்பு முகாம் நடக்கிறது. இதுகுறித்து சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில், 1,392 மையங்களில், அக்., 3(இன்று) கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. காலை, 7:00 முதல், இரவு, 7:00 மணி வரை நடக்கும் முகாமில், ஒரு லட்சத்து, 72 ஆயிரத்து, 170 டோஸ் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவாக்சின், கோவிஷீல்டு,

சேலம்: இன்னும் தடுப்பூசி போடாதவர்களுக்கு இன்று சிறப்பு முகாம் நடக்கிறது. இதுகுறித்து சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில், 1,392 மையங்களில், அக்., 3(இன்று) கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. காலை, 7:00 முதல், இரவு, 7:00 மணி வரை நடக்கும் முகாமில், ஒரு லட்சத்து, 72 ஆயிரத்து, 170 டோஸ் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவாக்சின், கோவிஷீல்டு, முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். 18 வயது நிரம்பிய, முதல் தவணை செலுத்திக்கொண்ட அனைவரும், தவறாமல், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கடந்த ஜன., 16 முதல், தற்போது வரை, 18 வயது நிரம்பிய, 16 லட்சத்து, 63 ஆயிரத்து, 265 பேருக்கு முதல் தவணை, ஐந்து லட்சத்து, 40 ஆயிரத்து, 596 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். விடுபட்டவர்கள், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, தடுப்பூசி செலுத்தி, 100 சதவீத இலக்கை அடைய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X