பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் கட்டுப்பாடு அறை திறப்பு: தகவல், புகார் தெரிவிக்க அழைப்பு

Added : அக் 03, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில், 24 உள்ளாட்சி பதவிக்கு, அக்., 9 காலை, 7:00 முதல், மாலை, 5:00 மணிவரை, சாதாரண வாக்காளர்களுக்கும், மாலை, 5:00 முதல், 6:00 மணிவரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. பதற்றமான, 58 ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவை அமைதியாக நடத்த கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, நுண்பார்வை யாளர்கள் மூலம், வீடியோ பதிவு

சேலம்: சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில், 24 உள்ளாட்சி பதவிக்கு, அக்., 9 காலை, 7:00 முதல், மாலை, 5:00 மணிவரை, சாதாரண வாக்காளர்களுக்கும், மாலை, 5:00 முதல், 6:00 மணிவரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. பதற்றமான, 58 ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவை அமைதியாக நடத்த கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, நுண்பார்வை யாளர்கள் மூலம், வீடியோ பதிவு செய்யப்படுகிறது. தேர்தல் பிரசார கூட்டம், ஊர்வலத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும். அப்போது, சமூக இடைவெளி பின்பற்றி, முக கவசம் அணிதல் வேண்டும். தேர்தல் தொடர்பான புகார், தகவல் பெற, சேலம் கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா, '1950' என்ற எண்ணில், வரும், 12 வரை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X