பொது செய்தி

தமிழ்நாடு

தயார் நிலையில் ஓட்டுப்பெட்டி; ஓட்டுச்சீட்டு: புளியம்பட்டியில் வாக்காளருக்கு தலா 2 ஓட்டு

Added : அக் 03, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, வரும், 9ல், ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. அதில், முதல் இரு பதவிகளுக்கு தலா, 11 பேர், 10 ஊராட்சி தலைவருக்கு, 39 பேர், 12 ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு, 30 பேர் என, 91 பேர் தேர்தல் களத்தை சந்திக்கின்றனர்.புளியம்பட்டி ஊராட்சியில், தலைவர், 3வது வார்டு

சேலம்: சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, வரும், 9ல், ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. அதில், முதல் இரு பதவிகளுக்கு தலா, 11 பேர், 10 ஊராட்சி தலைவருக்கு, 39 பேர், 12 ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு, 30 பேர் என, 91 பேர் தேர்தல் களத்தை சந்திக்கின்றனர்.


புளியம்பட்டி ஊராட்சியில், தலைவர், 3வது வார்டு உறுப்பினருக்கும் சேர்ந்து தேர்தல் நடக்க உள்ளது. அதனால், வாக்காளர்கள், தலா இரண்டு ஓட்டுப்போட வேண்டும். தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு ஓட்டுச்சீட்டு, உறுப்பினருக்கு வெள்ளை நிற ஓட்டுச்சீட்டிலும், வாக்காளர் ஓட்டுகளை பதிவிட வேண்டும். தவிர, மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு, மஞ்சள் நிற ஓட்டுச்சீட்டு, ஒன்றிய உறுப்பினருக்கு பச்சை நிற ஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்படுகிறது. மொத்தம், 195 ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. ஓட்டுச்சாவடிக்கு ஒரு ஓட்டுப்பெட்டி வீதம், 195 ஓட்டுப்பெட்டிகள், அதே எண்ணிக்கையில் அவசர தேவைக்கு, மேலும், 195 ஓட்டுப்பெட்டிகள் என, 390 ஓட்டுப்பெட்டிகள், தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டுப்பாடில் தயாராக வைக்கப்பட்டுள்ளன. தவிர, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலுக்கு, 96 ஓட்டுச்சாவடிக்கு சேர்த்து, 59 ஆயிரத்து, 500 ஓட்டுச்சீட்டு, ஒன்றிய உறுப்பினருக்கு ஏழு ஓட்டுச்சாவடிக்கு, 5,800, ஊராட்சி தலைவருக்கு, 81 ஓட்டுச்சாவடிகளுக்கு, 61 ஆயிரம், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு, 11 ஓட்டுச்சாவடிக்கு சேர்த்து, 7,500 ஓட்டுச்சீட்டு தயாராக உள்ளதாக, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X