பொது செய்தி

தமிழ்நாடு

சுங்கச்சாவடியில் மீண்டும் பணி வழங்க ஆத்தூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தர்ணா

Added : அக் 03, 2021
Share
Advertisement
ஆத்தூர்: நத்தக்கரை சுங்கச்சாவடியில் மீண்டும் பணி வழங்கக்கோரி, ஆத்தூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், பலர், தர்ணாவில் ஈடுபட்டனர்.தலைவாசல், நத்தக்கரை சுங்கச்சாவடியில் பணிபுரிந்த, 60 பேரை, புதிதாக பொறுப்பேற்ற தனியார் நிறுவனம் பணி நீக்கம் செய்து, புதிதாக ஆட்களை நியமித்தது. இதனால், பழைய பணியாளர்கள், மீண்டும் பணி வழங்குதல், நிலுவை உள்ளிட்ட ஊதிய பலன்கள் வழங்க கோரி, ஆத்தூர் ஆர்.டி.ஓ.,

ஆத்தூர்: நத்தக்கரை சுங்கச்சாவடியில் மீண்டும் பணி வழங்கக்கோரி, ஆத்தூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், பலர், தர்ணாவில் ஈடுபட்டனர்.


தலைவாசல், நத்தக்கரை சுங்கச்சாவடியில் பணிபுரிந்த, 60 பேரை, புதிதாக பொறுப்பேற்ற தனியார் நிறுவனம் பணி நீக்கம் செய்து, புதிதாக ஆட்களை நியமித்தது. இதனால், பழைய பணியாளர்கள், மீண்டும் பணி வழங்குதல், நிலுவை உள்ளிட்ட ஊதிய பலன்கள் வழங்க கோரி, ஆத்தூர் ஆர்.டி.ஓ., சரண்யாவிடம் நேற்று மனு அளித்தனர். தொழிலாளர் நல நீதிமன்ற உத்தரவுக்கு பின், இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக, ஆர்.டி.ஓ., கூறினார். இதையடுத்து, ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில், மீண்டும் பணி வழங்கக்கோரி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ரேஷன், ஆதார் கார்டுகள், வாக்காளர் அட்டையை ஒப்படைப்பதாகவும், தலைவாசல் ஸ்டேஷன் போலீசார், சுங்கச்சாவடி நிர்வாகத்துக்கு ஆதரவாக பணியாளர்களை மிரட்டுவதாகவும் கோஷம் எழுப்பினர். ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் அன்பு செழியன் பேச்சு நடத்தி, 'கலெக்டர் கார்மேகத்திடம் தகவல் தெரிவித்து தீர்வு காணப்படும்' என உறுதியளித்தார். பின், போராட்டத்தை கைவிட்டு, சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X